1
00:00:26,444 --> 00:00:29,196
பதின்பருவத்தில் தான் நாம்
மிக உற்சாகத்தோடு இருக்கிறோம்.

2
00:00:30,573 --> 00:00:32,408
நம் வாழ்க்கைக் கதையை
பெரிய அளவில்

3
00:00:32,533 --> 00:00:35,828
மாற்றக் கூடிய ரசாயனங்கள்
நமது மூளையில் சுரக்கும்.

4
00:00:36,704 --> 00:00:39,248
சிறந்த மதிப்பெண்கள்
புலிட்ஸர் பரிசு போல தோன்றும்,

5
00:00:39,373 --> 00:00:42,752
துணையில்லாத சனிக்கிழமை இரவு
முடிவில்லாத தனிமையாகத் தோன்றும்,

6
00:00:43,043 --> 00:00:46,213
நமது ஆய்வக கூட்டாளி நம்
காதலாக மாறுவார்கள்.

7
00:00:47,214 --> 00:00:49,925
ஆனாலும், என் சீனியர் வருட துவக்கத்தில்,

8
00:00:50,050 --> 00:00:52,261
சுவாரஸ்யமான, குறிப்பிடத்தக்க
எந்த நிகழ்வும்

9
00:00:52,386 --> 00:00:53,721
என் வாழ்க்கையில் ஏற்படவில்லை.

10
00:00:54,638 --> 00:00:56,432
என் வாழ்க்கைக்கு நன்றி சொன்னேன்.

11
00:00:57,600 --> 00:01:00,186
எனக்கு நெருங்கிய தோழர்கள் இருந்தனர்.
இருவர் தான்...

12
00:01:00,311 --> 00:01:01,187
பொறு. உன்னால் முடியும்.

13
00:01:01,562 --> 00:01:02,646
...என் வயதில்

14
00:01:02,772 --> 00:01:04,690
சந்தித்து காதல்வயப்பட்ட பெற்றோர்கள்,

15
00:01:05,149 --> 00:01:06,317
மற்றும் என் எழுத்து.

16
00:01:06,734 --> 00:01:08,944
எழுதுவது எனக்கு ரொம்ப பிடிக்கும் என்பதால்,

17
00:01:09,320 --> 00:01:11,322
பள்ளி செய்தித்தாளின்

18
00:01:11,489 --> 00:01:13,365
தலைமை பதிப்பாசிரியராக
இருக்க முயற்சிக்கிறேன்.

19
00:01:13,574 --> 00:01:15,993
நான் யார் என்றும்,
உலகை நான் எப்படி பார்க்கிறேன்

20
00:01:16,160 --> 00:01:17,620
என்றும் விவரிக்க
ஒரு களம் தேவைப்பட்டது.

21
00:01:18,120 --> 00:01:19,580
ஆனால் சொல்லுவதற்கு எதுவுமின்றி

22
00:01:19,705 --> 00:01:21,624
ஒரு களம் மட்டுமே இருப்பது தேவையற்றது.

23
00:01:22,166 --> 00:01:23,125
நானும் எதுவும் எழுதவில்லை,

24
00:01:23,834 --> 00:01:26,796
ஏனென்றால் எழுதுவதற்கு ஏற்ற எதுவும்
எனக்கு நடக்கவில்லை.

25
00:01:29,548 --> 00:01:32,468
பிறகு, ஒரு நாள்
அந்த பணியைப்பற்றி நான் கேள்விப்பட்டேன்,

26
00:01:32,760 --> 00:01:34,220
இறுதியாக ஏதோ ஒன்று நடந்தது.

27
00:01:34,512 --> 00:01:40,267
இரசாயன இதயம்

28
00:01:55,157 --> 00:01:56,867
காதல் பாடல் XVII
எழுதியவர் பாப்லோ நெருடா

29
00:01:57,034 --> 00:01:59,286
சில மறைக்கப்பட்ட விஷயங்களை
காதலிப்பது போல ரகசியமாக,

30
00:01:59,411 --> 00:02:01,330
நிழலுக்கும் ஆன்மாவிற்கும் இடையே
உன்னை காதலிக்கிறேன்

31
00:02:05,626 --> 00:02:07,253
ஹாய், நண்பர்களே. வருகைக்கு நன்றி.

32
00:02:07,378 --> 00:02:09,296
-உள்ளே வாருங்கள்.
-இருவரும் வர வேண்டுமா?

33
00:02:09,922 --> 00:02:11,632
ஆம், இருவரும் வந்தால் நல்லது தான்.

34
00:02:14,593 --> 00:02:16,637
கிழக்கு ரிவர் பகுதியில் இரண்டு
வருடங்களாக கெசட்க்கு

35
00:02:16,762 --> 00:02:19,390
எழுதிக்கொண்டிருந்த கிரேஸ்
இப்போது தான் இங்கு மாற்றப்பட்டாள்.

36
00:02:19,640 --> 00:02:22,685
உங்கள் வயதிற்கு நீங்கள் இருவருமே
ஆழமான கருத்துக்கள் உடையவர்கள்.

37
00:02:23,811 --> 00:02:27,189
அதனால் தான் நான் நீங்கள்
இருவரும் சேர்ந்து ஒரு மகத்தான

38
00:02:27,314 --> 00:02:30,109
தலைமை பதிப்பாசிரியர் ஜோடியாக
திகழ்வீர்களென நினைக்கிறேன்.

39
00:02:31,110 --> 00:02:32,194
-முடியாது.
-என்ன?

40
00:02:33,779 --> 00:02:34,697
மீண்டும் சொல்வாயா?

41
00:02:34,822 --> 00:02:36,532
எனக்கு பதிப்பாசிரியராக இருக்க
விருப்பமில்லை.

42
00:02:37,283 --> 00:02:38,284
இருந்தாலும் நன்றி.

43
00:02:42,496 --> 00:02:43,330
ஹே.

44
00:02:43,831 --> 00:02:45,708
-ஏன் வேண்டாம் என்று சொன்னாய்?
-என்ன?

45
00:02:46,000 --> 00:02:47,084
ஏன் வேண்டாம் என்று சொன்னாய்?

46
00:02:48,335 --> 00:02:50,629
-உனக்கு என்ன அக்கறை?
-என்ன?

47
00:02:50,754 --> 00:02:51,922
உனக்கு என்ன அக்கறை?

48
00:02:53,841 --> 00:02:57,469
அக்கறை இல்லை. ஒரு எழுத்தாளருக்கு
இது ஒரு நல்ல வாய்ப்பு.

49
00:02:57,636 --> 00:02:59,305
நீ வேண்டாம் என சொன்னது
எனக்கு புரியவில்லை.

50
00:02:59,638 --> 00:03:02,016
சரி, வந்து, அதைப் பற்றியே
இரவு முழுவதும் யோசிக்காதே.

51
00:03:09,106 --> 00:03:10,524
அடக்கடவுளே.

52
00:03:11,317 --> 00:03:12,359
என்ன?

53
00:03:14,236 --> 00:03:15,654
என் பேருந்தை தவறவிட்டேன்.

54
00:03:17,907 --> 00:03:18,866
நடக்க முடியாதா?

55
00:03:21,368 --> 00:03:23,370
இல்லை, அதாவது, முடியும்.
அது ரொம்ப தூரம்.

56
00:03:24,413 --> 00:03:26,248
அதனால் தான் நான் பேருந்தில் செல்வேன்.

57
00:03:40,137 --> 00:03:41,722
என் வீடு அங்கே இருக்கிறது.

58
00:03:43,223 --> 00:03:44,099
என்னிடம் கார் இருக்கு.

59
00:03:44,224 --> 00:03:45,851
வேண்டுமென்றால் நீ என்னோடு வரலாம்.

60
00:03:47,645 --> 00:03:48,520
அப்படியா?

61
00:03:50,439 --> 00:03:51,315
நன்றி.

62
00:03:57,905 --> 00:03:59,406
ஹேய், உனக்கு "நெஹ்ராடா" பிடிக்குமா?

63
00:04:01,825 --> 00:04:03,035
நெருடா.

64
00:04:08,832 --> 00:04:10,709
சரி, வந்து, ஒரு பத்திதான் படித்தேன்,

65
00:04:10,834 --> 00:04:13,337
ஆனால் அது அற்புதமாக இருந்தது.

66
00:04:14,838 --> 00:04:15,798
அப்படியா?

67
00:04:18,634 --> 00:04:19,927
ஆம்.
நீ அப்படி நினைக்கலையா?

68
00:04:21,845 --> 00:04:23,681
இல்லை, தங்களுக்கு புரியாத
கவிதையை படிக்கும்போது

69
00:04:23,806 --> 00:04:26,642
மக்கள் இப்படி தான்
சொல்வார்கள் என்று நினைக்கிறேன்.

70
00:04:38,362 --> 00:04:39,321
100 காதல் பாடல்கள்

71
00:04:39,488 --> 00:04:40,322
இதை படித்து முடி.

72
00:04:42,324 --> 00:04:44,326
அப்போதும் இப்படியே உணருகிறாயா என சொல்.

73
00:04:53,293 --> 00:04:54,336
இது ஒரு அழகான இடம்.

74
00:04:56,171 --> 00:04:57,923
கார் இருந்தும் ஏன்
பள்ளிக்கு நடந்து வருகிறாய்?

75
00:04:58,966 --> 00:05:00,134
எனக்கு கார் ஓட்ட பிடிக்காது.

76
00:05:00,467 --> 00:05:01,635
உன்னிடம் உரிமம் இருக்கா?

77
00:05:01,760 --> 00:05:02,636
இருக்கு.

78
00:05:10,477 --> 00:05:11,437
இந்த பாட்டு நல்லா இருக்கு.

79
00:05:37,880 --> 00:05:40,340
நீ இப்படிப்பட்ட வீட்டில் வாழ்கிறாய்
ஆனால் கார் இல்லையா?

80
00:05:40,507 --> 00:05:43,135
கார் வாங்கும் அளவு நான் மதிப்பெண்
பெறவில்லை, ஆக...

81
00:05:47,431 --> 00:05:48,348
ரொம்ப நன்றி.

82
00:05:58,901 --> 00:06:00,319
சரி, நாம் நாளை சந்திக்கலாமா?

83
00:06:02,571 --> 00:06:03,405
சரி.

84
00:06:07,284 --> 00:06:09,453
-ஹென்றி.
-என்ன, சட்ஸ்?

85
00:06:10,245 --> 00:06:12,206
நீ இப்போது தான் வந்தாயா என்ன?

86
00:06:12,664 --> 00:06:13,791
இல்லை. இப்போது கிளம்புகிறேன்.

87
00:06:13,957 --> 00:06:14,875
எனக்கு தாமதமாகிறது.

88
00:06:15,501 --> 00:06:17,044
சரி, யார் அந்தப் பெண்?

89
00:06:17,294 --> 00:06:19,379
-எந்த பெண்?
-ஹென்றியை வீட்டிற்கு அழைத்து வந்தவள்.

90
00:06:19,880 --> 00:06:21,340
ஒரு பெண்
உன்னை அழைத்து வந்தாளா?

91
00:06:22,299 --> 00:06:24,760
தன் காரை இங்கே நிறுத்தி விட்டு
நடந்து சென்றாள்.

92
00:06:24,885 --> 00:06:25,803
ஓடிப் போ.

93
00:06:25,969 --> 00:06:27,638
சரி, நீ மீண்டும் எப்போது இங்கிருந்து
போவாய்?

94
00:06:27,805 --> 00:06:28,639
அவளை விடு.

95
00:06:28,931 --> 00:06:30,599
காதல் மீது போர் தொடுத்துள்ளாள்.

96
00:06:30,933 --> 00:06:32,684
இல்லை, ஏமாற்றுபவர்கள் மீது தான்.

97
00:06:33,352 --> 00:06:35,104
-இன்று அவனைப் பார்ப்பாயா?
-அட,கடவுளே.

98
00:06:35,229 --> 00:06:36,355
அவன் தான் பார்ப்பான், அம்மா.

99
00:06:36,480 --> 00:06:38,023
இன்று பல முறை அவனை சந்திப்பேன்.

100
00:06:38,148 --> 00:06:40,776
ஆக, முதல் நாள் எப்படி இருந்தது?

101
00:06:41,276 --> 00:06:42,986
ஆமாம். நன்றாக இருந்தது.

102
00:06:43,862 --> 00:06:44,738
வேலை கிடைத்ததா?

103
00:06:48,158 --> 00:06:49,785
-ஆம், கிடைத்தது.
-சிறப்பான வேலை.

104
00:06:49,952 --> 00:06:50,911
வாழ்த்துக்கள், அன்பே.

105
00:06:51,578 --> 00:06:52,746
சிறப்பான வேலை.

106
00:06:53,080 --> 00:06:54,540
சரி, நான் போகணும். உங்களை நேசிக்கிறேன்.

107
00:06:55,124 --> 00:06:57,126
ஆக, யார் அந்தப் பெண்?

108
00:07:00,879 --> 00:07:02,297
கிரேஸுக்கான எல்லா முடிவுகளையும் பார்

109
00:07:09,012 --> 00:07:11,765
கிரேஸ் டவுன்
கிழக்கு ரிவர், நியூ ஜெர்சி

110
00:07:17,938 --> 00:07:19,481
புகைப்படங்கள் அந்தரங்கமானவை

111
00:07:23,861 --> 00:07:25,779
கிரேஸ் டவுன், கிழக்கு ரிவர், நியூ ஜெர்சி

112
00:07:31,910 --> 00:07:34,329
"உன்னை, நெருப்பை கொட்டும்
சால்ட்-ரோஸ், டோபாஸ்,

113
00:07:34,454 --> 00:07:38,167
அல்லது இளஞ்சிவப்பு அம்பு போல நினைத்து
நான் உன்னை நேசிக்கவில்லை.

114
00:07:38,417 --> 00:07:40,752
சில மறைக்கப்பட்ட விஷயங்களை
காதலிப்பது போல ரகசியமாக,

115
00:07:41,003 --> 00:07:43,213
நிழலுக்கும் ஆன்மாவிற்கும் இடையே
உன்னை காதலிக்கிறேன்."

116
00:07:43,422 --> 00:07:44,631
"...நிழலுக்கும் ஆன்மாவிற்கும்."

117
00:07:44,756 --> 00:07:47,217
"பூக்களின் பிரகாசத்தை
தன்னுள்ளே மறைத்து வைத்து,

118
00:07:47,342 --> 00:07:49,344
வெளியில் பூக்காத, செடி போல,

119
00:07:49,678 --> 00:07:51,096
நான் உன்னை நேசிக்கிறேன்."

120
00:07:51,263 --> 00:07:54,141
"...உன் அன்பின் வெளிப்பாடாக,
என் உடம்பில் மறைந்து இருக்கும்..."

121
00:07:54,391 --> 00:07:56,935
"...பூமியிலிருந்து எழும்பியுள்ள
திடமான வாசத்திற்கு நன்றி.

122
00:07:57,144 --> 00:08:00,522
எப்படி, எப்போது, எங்கிருந்து
என்பது தெரியாமலே உன்னை நேசிக்கிறேன்.

123
00:08:00,814 --> 00:08:03,734
நீ அல்லது நான் என்பது போன்ற,
சிக்கல்களும் அகங்காரமும் இன்றி,

124
00:08:03,984 --> 00:08:05,444
என் மார்பிலிருக்கும் உன் கை,

125
00:08:05,652 --> 00:08:08,864
என்னுடையது என்பது போன்ற அருகாமையில்,
உன்னை நேரடியாக நேசிக்கிறேன்."

126
00:08:09,406 --> 00:08:12,409
"என் மார்பிலிருக்கும் உன் கை
என்னுடையது என்பது போன்ற அருகாமையில்.

127
00:08:16,371 --> 00:08:19,124
நான் கனவு காணும் போது
உன் கண்கள் மூடும் அளவு அருகில்."

128
00:08:20,584 --> 00:08:22,211
நீ சொன்னது எனக்கு புரியவில்லை,

129
00:08:22,461 --> 00:08:24,296
-ஆனால் அது வேலை செய்தது.
-என்ன?

130
00:08:24,463 --> 00:08:27,132
செய்தித்தாள் அவளுக்கு நன்மையாக
இருக்குமென நினைக்கிறேன்.

131
00:08:28,884 --> 00:08:30,427
நான்கு பதிப்புகள் கொண்டு வருவோம்...

132
00:08:30,761 --> 00:08:33,013
நவம்பரில் முதல் பதிப்பு,
ஜூனில் கடைசி பதிப்பு.

133
00:08:33,639 --> 00:08:36,516
முதல் மூன்றில் தோட்டக்கலை,

134
00:08:36,767 --> 00:08:39,811
திடுக்கிடும் செய்திகள், விளையாட்டு
செய்திகள், போன்றவை போடுவோம்.

135
00:08:40,145 --> 00:08:42,731
கடைசி பதிப்பில் தான்,
நம் கற்பனை திறன் இருக்கும்.

136
00:08:42,981 --> 00:08:45,025
குழுவின் உதவியோடு,
ஹென்றி ஒரு தீம் தேர்வு செய்வான்,

137
00:08:45,150 --> 00:08:47,653
அந்த தீம்மை ஆராய்ந்து உங்களுக்கு
தோன்றியது போல செய்வதற்கு

138
00:08:47,778 --> 00:08:49,029
உங்களுக்கு அனுமதியுண்டு.

139
00:08:49,446 --> 00:08:52,407
அந்த கடைசி பதிப்பு தான் இந்த
குழுவின் தனித்துவத்தை சொல்லவும்,

140
00:08:52,532 --> 00:08:54,993
உங்களுக்கு உதவும் மாணவர்களுக்கு
உங்களது அறிவை

141
00:08:55,118 --> 00:08:56,703
பகிரவும் ஒரு வாய்ப்பாக அமையும்.

142
00:08:57,537 --> 00:09:00,082
இப்போது, இந்த கட்டிடத்தின்
சுவர்களுக்கிடையே நீங்கள் செலவிட்ட

143
00:09:00,207 --> 00:09:01,833
நான்கு ஆண்டுகளைப்பற்றி பேசவில்லை.

144
00:09:01,959 --> 00:09:04,127
அதை விட பெரிய விஷயத்தைப்பற்றி பேசுகிறேன்.

145
00:09:04,461 --> 00:09:09,383
இந்த பூமியில் நீங்கள் வாழ்ந்த
17 வருடங்களைப் பற்றிப் பேசுகிறேன்.

146
00:09:10,092 --> 00:09:12,636
கடைசியாக, அருகிலுள்ள 'கிழக்கு
ரிவர் பிரப்பரேட்டரி' பள்ளியிலிருந்து

147
00:09:12,761 --> 00:09:15,097
வந்திருக்கும் கிரேஸ் நம்மோடு சேர்ந்து,

148
00:09:15,222 --> 00:09:18,725
ஹென்றிக்கு, பதிப்புக்கு தேவையான
எல்லா உதவிகளையும் செய்வாள்.

149
00:09:19,518 --> 00:09:21,603
கடந்த வருடம், இறுதி பதிப்பிற்கு
கைலும் அவனது குழுவினரும்

150
00:09:21,812 --> 00:09:22,854
செய்தது இதுதான்.

151
00:09:23,021 --> 00:09:24,189
மேற்கு ரிவர் பதிவு
வெளிப்பாடுகள்

152
00:09:24,314 --> 00:09:26,358
மன்னிக்கவும்.
கைல் சொதப்பிவிட்டான்.

153
00:09:27,401 --> 00:09:28,860
ரொம்ப அருமை, லா.

154
00:09:28,986 --> 00:09:29,987
வந்து, சரி...

155
00:09:31,655 --> 00:09:34,616
போன வருடத்தின் கடைசி பதிப்பு
மோசமாகத்தான் இருந்தது.

156
00:09:38,078 --> 00:09:38,954
சரி.

157
00:09:45,085 --> 00:09:46,962
ஹேய், உன் எண்ணங்கள் பற்றி
எனக்கு தெரியாது--

158
00:09:47,087 --> 00:09:48,880
வந்து, நான் எழுத மாட்டேன்.

159
00:09:50,424 --> 00:09:53,135
உனக்கு ஏதாவது சொல்லணும் என்றால்,
அதை உனக்கே சொல்லிக்கொள்

160
00:09:53,260 --> 00:09:56,388
நான் திருத்தம் செய்வது, வடிவமைப்பது
போன்றவற்றிற்கு உதவுகிறேன்...

161
00:09:56,513 --> 00:09:57,764
நான் தான் வடிவமைப்பேன்.

162
00:09:59,766 --> 00:10:01,393
சரி, வடிவமைப்பதை தவிர எல்லாவற்றிற்கும்.

163
00:10:01,518 --> 00:10:04,313
ஆனால் எழுதுவதற்கு மட்டும் மாட்டேன்.

164
00:10:05,063 --> 00:10:06,356
நான் இணை பதிப்பாசிரியர்தான்.

165
00:10:07,107 --> 00:10:09,318
நீ இதற்காக மிகவும் கடினமாக உழைத்துள்ளதால்,

166
00:10:09,609 --> 00:10:10,944
இது எல்லாம் உன்னுடையதாக இருக்கணும்.

167
00:10:12,904 --> 00:10:14,698
கோரா மீண்டும்
உன்னை விரும்புவதாக தெரிகிறது.

168
00:10:14,948 --> 00:10:16,241
ஹேய், அவள் என்ன செய்கிறாள்?

169
00:10:16,366 --> 00:10:18,744
என்னை, கண்களால் சீண்டுகிறாள்,
என் நகைச்சுவைக்கு சிரிக்கிறாள்,

170
00:10:18,869 --> 00:10:21,621
எங்களை இணைக்கும்,
ஒரு காற்று குமிழி,

171
00:10:21,747 --> 00:10:24,458
இருப்பது போல, மற்றும்
அதில், நிறைய சர்க்கரை மிட்டாய்கள்,

172
00:10:24,750 --> 00:10:28,962
இனிப்புகள், சிவிங்கம்,மற்றும் ஸ்பார்க்ளீஸ்
இருப்பது போல இருக்கு, அப்புறம் அவற்றை

173
00:10:29,087 --> 00:10:30,797
நான் சாப்பிட்டால், போன வருடம் போல,

174
00:10:30,922 --> 00:10:33,425
இன்னொரு பற்சொத்தை ஏற்படும்,
அதனால் என்னால் முடியாது.

175
00:10:34,009 --> 00:10:35,093
நல்ல உவமை.

176
00:10:35,218 --> 00:10:36,803
நன்றி. மிக்க நன்றி.

177
00:10:37,262 --> 00:10:38,513
-ஹேய், கிரேஸ்.
-ஹேங்கார்ட்.

178
00:10:39,014 --> 00:10:40,015
-நம் பேருந்து!
-ஹேங்கார்ட்!

179
00:10:40,140 --> 00:10:41,808
உன்னிடம் சொல்ல வாய்ப்பு கிடைக்கவில்லை,

180
00:10:41,975 --> 00:10:43,018
அந்த கவிதையை
படித்துவிட்டேன்.

181
00:10:43,518 --> 00:10:45,854
மற்றும்... ஆமாம்.

182
00:10:46,229 --> 00:10:47,731
வந்து, அது அற்புதமாக இருக்கு,

183
00:10:47,856 --> 00:10:50,817
ஆனால் வழக்கமான மோசமான கவிதை போல அல்ல.

184
00:10:52,235 --> 00:10:53,278
அந்த கவிதையும்,

185
00:10:53,403 --> 00:10:55,322
அதைதான் சொல்கிறது, ஏனென்றால்,

186
00:10:55,447 --> 00:10:58,867
அவள் மேல் நெருடா கொண்டிருக்கும்
காதல், அது...

187
00:11:00,327 --> 00:11:03,288
சூரியஒளி, ரோஜாக்கள் மற்றும்
வழக்கமான விஷயங்களால் வரவில்லை.

188
00:11:03,413 --> 00:11:07,042
அது, அவளது... குறைகள்

189
00:11:07,167 --> 00:11:10,003
குறைபாடுகள், மோசமான குணங்களில்
இருந்து...

190
00:11:10,128 --> 00:11:11,713
-ஹேங்கார்ட்!
-...அதாவது...

191
00:11:11,838 --> 00:11:13,131
இங்கே வா, முட்டாளே!

192
00:11:13,673 --> 00:11:15,425
...அவள் எப்படி இருக்கிறாள் என்பதை விட

193
00:11:15,550 --> 00:11:18,011
அவள் எப்படி இருக்க தகுதியானவள்
என்பதை பொறுத்தது.

194
00:11:20,931 --> 00:11:22,182
ஆக, எனக்குத் தெரியாது.

195
00:11:22,682 --> 00:11:25,018
அந்த விதத்தில் பார்த்தால்,
ரொம்ப அழகாக இருக்கும்.

196
00:11:27,396 --> 00:11:29,231
உன் பேருந்தை நீ மறுபடியும்
தவறவிட போகிறாய்.

197
00:11:31,358 --> 00:11:32,734
உன்னை பார்த்துவிட்டேன்.

198
00:11:33,985 --> 00:11:34,945
அவன் என்ன செய்கிறான்?

199
00:11:38,573 --> 00:11:40,325
என்னை மீண்டும் கூட்டிட்டுப் போவாயா?

200
00:11:42,369 --> 00:11:43,245
கண்டிப்பாக.

201
00:11:58,802 --> 00:12:00,971
வீடு வரை என்னை ஓட்ட அனுமதித்தற்கு நன்றி.

202
00:12:08,812 --> 00:12:11,398
நீ எங்கே போகிறாய்? நீ எதற்காக போகிறாய்?

203
00:12:12,107 --> 00:12:14,818
உன் வண்ணங்கள் என்ன?
உன் எண்ணங்கள் என்ன?

204
00:12:15,610 --> 00:12:19,197
உன்னை பார்க்க, நான் திரும்புகிறேன்.
உன்னை புரிந்துகொள்ள, நான் விரும்புகிறேன்.

205
00:12:46,808 --> 00:12:53,607
ஹே! உன் காரை யார் எடுத்துச் சென்றார்கள்?

206
00:13:03,283 --> 00:13:04,367
சரி.

207
00:13:05,118 --> 00:13:05,994
-பை.
-அடக்கடவுளே,

208
00:13:06,161 --> 00:13:08,371
-ஸ்பானிஷில் பேசி கொல்கிறாள்.
-என்ன விஷயம் என கேட்கிறாயா?

209
00:13:08,497 --> 00:13:10,540
என்ன? அவள் மறுபடியும்
என்னை சாகடிக்கவா? வந்து...

210
00:13:10,957 --> 00:13:11,917
கிளம்புகிறேன், நண்பர்களே.

211
00:13:12,417 --> 00:13:13,418
போய் வா.

212
00:13:14,794 --> 00:13:15,629
பை.

213
00:13:19,382 --> 00:13:20,217
ஐயோ.

214
00:13:36,441 --> 00:13:39,986
நீ இப்போது "மெ-மெ" என்று என்ன செய்தாய்?

215
00:13:45,825 --> 00:13:46,952
நாங்கள் எரிச்சலானால்,

216
00:13:47,244 --> 00:13:48,578
அப்படி செய்வோம்.

217
00:13:48,703 --> 00:13:49,579
எனக்குத் தெரியலை.

218
00:13:53,625 --> 00:13:55,544
இன்றும் உன் காரில் என்னை
அழைத்துச் செல்ல முடியுமா?

219
00:14:02,217 --> 00:14:03,718
ஹேய், உள்ளே வந்து, சிறிது நேரம்,

220
00:14:03,843 --> 00:14:05,053
இருந்துவிட்டு போகிறாயா?

221
00:14:07,639 --> 00:14:08,598
இன்று முடியாது.

222
00:14:09,933 --> 00:14:10,767
சரி,

223
00:14:12,727 --> 00:14:14,604
-அப்போ, நாளை சந்திப்போம்...
-சரி.

224
00:14:21,903 --> 00:14:22,779
ஹென்றி?

225
00:14:26,992 --> 00:14:28,285
இங்கே ஆறு மணிக்கு என்னை சந்தி.

226
00:14:29,452 --> 00:14:30,328
சரி.

227
00:14:30,996 --> 00:14:32,872
சரி... உன்னை
ஆறு மணிக்கு சந்திக்கிறேன்.

228
00:14:33,081 --> 00:14:33,957
சரி.

229
00:14:34,624 --> 00:14:36,001
ப்ரெட் கொண்டு வா.

230
00:14:51,933 --> 00:14:53,268
ஹேய், உன் கார் எங்கே?

231
00:14:53,393 --> 00:14:54,728
அது என் வீட்டில் இருக்கிறது.

232
00:14:55,895 --> 00:14:57,439
அதை ஒட்டிட்டு போய்,
இப்போ நடந்து வந்தாயா?

233
00:14:57,606 --> 00:14:58,607
அது நமக்கு தேவைப்படாது.

234
00:16:02,379 --> 00:16:03,296
வா.

235
00:16:08,635 --> 00:16:11,096
1800களில் இது ஒரு பருத்தி ஆலையாக இருந்தது,

236
00:16:11,346 --> 00:16:12,472
அதன் பிறகு...

237
00:16:13,348 --> 00:16:17,894
1989ல் மூடப்படும் வரை பிளாஸ்டிக் குடுவைகள்
செய்தார்கள் என்று நினைக்கிறேன்.

238
00:16:37,288 --> 00:16:38,289
அமைதியாக இருக்கணும்.

239
00:17:19,164 --> 00:17:20,582
அவை பயந்து போய்விடும்.

240
00:17:25,503 --> 00:17:26,337
இங்கே வா.

241
00:18:15,011 --> 00:18:16,304
உனக்கு காதலி இருந்ததுண்டா?

242
00:18:18,431 --> 00:18:21,434
இல்லை, இருந்ததில்லை.

243
00:18:21,976 --> 00:18:23,102
ஏன்?

244
00:18:25,104 --> 00:18:26,523
உனக்கு காதலன் இருந்தானா?

245
00:18:27,816 --> 00:18:28,691
இல்லை.

246
00:18:30,401 --> 00:18:31,736
அப்போ என்ன காரணம்?

247
00:18:32,612 --> 00:18:33,488
எனக்குத் தெரியாது.

248
00:18:38,243 --> 00:18:39,828
தெரியலை. நான் இதில் சிறப்பானவன் இல்லை.

249
00:18:40,411 --> 00:18:42,080
சரி, நீ எழுத்தாளன் என நினைத்தேன்.

250
00:18:44,749 --> 00:18:45,667
ஆம், அது உண்மைதான்.

251
00:18:45,834 --> 00:18:47,377
வந்து, இப்போதே வீட்டிற்கு போய்

252
00:18:47,544 --> 00:18:50,672
எனக்கு ஏன் காதலி இல்லை
என்று ஒரு கட்டுரை போன்ற

253
00:18:50,797 --> 00:18:52,715
ஏதையாவது உனக்காக எழுத முடியும்.

254
00:18:52,924 --> 00:18:54,926
அட, அப்போ நீ எல்லாவற்றையும்
பகுத்து வைக்கணும்.

255
00:18:56,219 --> 00:18:57,512
இல்லை. அதாவது, அது பகுப்பது அல்ல.

256
00:18:57,637 --> 00:19:00,139
சில நேரங்களில், எழுதுவது,
எனக்கு உதவும்...

257
00:19:01,766 --> 00:19:05,436
என்னையே புரிந்து கொள்ள, ஏனென்றால்,
அது... எனக்குத் தெரியவில்லை,

258
00:19:05,562 --> 00:19:07,605
பல நேரங்களில், உட்கார்ந்து
யோசித்தால் மட்டுமே

259
00:19:07,730 --> 00:19:09,440
என் உணர்வுகளை புரிந்துகொள்ள முடியும்.

260
00:19:10,275 --> 00:19:13,278
ஆனால், நீயும் என்னிடம்
எதுவும் சொல்லவில்லையே.

261
00:19:24,497 --> 00:19:27,000
என் உடற்பயிற்சியை
நீச்சல் குளத்தில் செய்துள்ளேன்.

262
00:19:28,918 --> 00:19:30,211
ஒன்பது மாதங்களுக்கு முன்,

263
00:19:30,753 --> 00:19:33,047
ஒரு வளைவில் என் கார் தடம் மாறி

264
00:19:33,172 --> 00:19:35,758
அங்கிருந்த ஒரு பாறையில் மோதி
தலைகீழாக உருண்டது.

265
00:19:37,510 --> 00:19:39,596
அது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை.

266
00:19:49,731 --> 00:19:50,773
இதைப் பார்க்கும் போது,

267
00:19:51,858 --> 00:19:53,192
மக்கள் எல்லோரும்

268
00:19:54,277 --> 00:19:58,489
இறந்து போன நட்சத்திரங்களின் சாம்பல்
என்பது தான் எனக்கு நினைவுக்கு வருகிறது.

269
00:20:00,700 --> 00:20:03,077
சிறிது காலத்திற்கு மட்டுமே ஒன்றாக

270
00:20:03,953 --> 00:20:06,372
சேர்ந்து இருக்கும் அணுக்களின்
தொகுப்பு தான் நாம்,

271
00:20:06,623 --> 00:20:10,001
அதற்கு பிறகு... நாம் பிரிந்து விடுகிறோம்.

272
00:20:13,421 --> 00:20:15,006
இவை எல்லாம் முடிந்த பிறகு,

273
00:20:16,549 --> 00:20:19,510
நாம் வெற்றிடத்திற்கு திரும்பி
விட்ட பிறகு...

274
00:20:20,970 --> 00:20:22,680
நாம் தூய்மையாகிறோம்.

275
00:20:24,682 --> 00:20:27,018
நம் பாவங்கள் எல்லாம்
துடைக்கப்பட்டது போல இருக்கும்.

276
00:20:28,478 --> 00:20:30,563
நிச்சயமாக செய்தித்தாளிற்காக எழுத மாட்டாயா?

277
00:20:35,068 --> 00:20:37,320
எந்த பாவங்கள் அழிக்கப்படணும்
என நினைக்கிறாய்?

278
00:21:12,605 --> 00:21:14,273
நான் பொறாமை உடையவளாக இருந்தேன்.

279
00:21:15,817 --> 00:21:16,818
நீதான் இதை செய்தாயா?

280
00:21:18,027 --> 00:21:19,237
என் 14 வயதில்.

281
00:21:21,823 --> 00:21:23,282
அது என்ன, லத்தீனா?

282
00:21:25,410 --> 00:21:26,494
அதன் அர்த்தமென்ன?

283
00:21:30,373 --> 00:21:31,249
எனக்கு சோர்வாக இருக்கு.

284
00:21:31,374 --> 00:21:34,002
நான்... வீட்டிற்கு போகப் போகிறேன்.

285
00:21:38,172 --> 00:21:39,132
நான் வேண்டுமானால்...

286
00:21:39,257 --> 00:21:40,883
நீயே திரும்பிப் போய் விடுவாயா?

287
00:21:42,051 --> 00:21:42,885
போய் விடுவேன்.

288
00:21:45,013 --> 00:21:46,723
-ஆனால் நீ நலம் தானே?
-ஆம், நலம்தான்.

289
00:21:47,557 --> 00:21:48,975
என்னோடு இருந்ததற்கு நன்றி.

290
00:21:52,729 --> 00:21:54,605
சரி, சரி. எப்போது வேண்டுமானாலும்.

291
00:22:31,893 --> 00:22:33,269
நீ ஏன் இன்னும் தூங்கவில்லை?

292
00:22:34,729 --> 00:22:35,980
இந்த வேலையைச் செய்கிறேன்.

293
00:22:39,233 --> 00:22:41,611
இது அம்மாவும் அப்பாவும் உன்
பிறந்த நாளிற்கு கொடுத்ததா?

294
00:22:43,905 --> 00:22:45,698
தொடாதே... அது இன்னும் காயவில்லை.

295
00:22:46,574 --> 00:22:48,034
தொட்டா சிணுங்கி, ஹென்றி.

296
00:22:54,332 --> 00:22:57,418
17வயது பையனுக்கு இது
ஒரு வினோதமான பொழுதுபோக்கு.

297
00:23:09,180 --> 00:23:11,516
உடல் வலி போலவே மன வலியும்

298
00:23:11,641 --> 00:23:14,268
மூளையின் அதே பாகங்களை
தாக்குகின்றன என உனக்கு தெரியுமா?

299
00:23:20,149 --> 00:23:21,984
அவன் என்னை விட்டு பிரிந்ததை
நினைக்கும் போது,

300
00:23:22,735 --> 00:23:26,948
என் நரம்பு மண்டலத்திற்கு என் மூளை
ஒரு துயர சமிஞை செலுத்துகிறது.

301
00:23:28,449 --> 00:23:31,410
அது என் இரத்த அழுத்ததையும்,
இதய துடிப்பையும் அதிகமாக்கி,

302
00:23:32,036 --> 00:23:33,538
நெஞ்சு வலி ஏற்படுத்துகிறது.

303
00:23:40,044 --> 00:23:41,671
இப்போதும் அப்படித்தான் நடக்கிறது.

304
00:23:42,880 --> 00:23:44,340
நான் போய் அம்மாவை அழைத்து வரவா?

305
00:23:44,465 --> 00:23:45,716
அடக்கடவுளே, தயவு செய்து, வேண்டாம்.

306
00:23:46,509 --> 00:23:47,426
கடவுளே.

307
00:24:08,281 --> 00:24:09,157
ஹென்றி.

308
00:24:10,074 --> 00:24:11,159
-அடுத்தது என்ன?
-சரி.

309
00:24:12,410 --> 00:24:16,706
சரி. நமது இறுதி பதிப்பிற்காக
சில கருத்துக்களை

310
00:24:16,831 --> 00:24:18,833
சில தீம்களை, நாம் விவாதிக்கலாம்.

311
00:24:19,083 --> 00:24:20,293
தற்போது நடக்கும் எதுவும் வேண்டாம்.

312
00:24:20,501 --> 00:24:23,671
ஆலிஸ் இன் ஒண்டர்லாண்ட் போன்ற
மாயத் தோற்றம் சரியாக இருக்குமா?

313
00:24:24,297 --> 00:24:26,215
அதாவது, நாம் எல்லோரும், அமிலத்தை ஊற்றி

314
00:24:26,340 --> 00:24:27,842
முயல் பொந்திற்குள் போவது போல.

315
00:24:28,134 --> 00:24:30,219
அது நன்றாக இருக்கும்.
அதை பற்றி யோசிக்கிறேன்.

316
00:24:32,096 --> 00:24:32,930
கிரேஸ்?

317
00:24:34,974 --> 00:24:35,850
என்ன?

318
00:24:35,975 --> 00:24:36,851
எதாவது யோசனை இருக்கா?

319
00:24:37,602 --> 00:24:38,561
எனக்குத் தெரியாது.

320
00:24:39,228 --> 00:24:40,104
எதுவுமில்லையா?

321
00:24:40,813 --> 00:24:42,440
ஆம், "தெரியாது" என்றால் அது தான் அர்த்தம்.

322
00:24:45,109 --> 00:24:46,944
கழிவறைக்கு போகலாமா? எனக்கு போகணும்.

323
00:24:47,987 --> 00:24:48,863
கண்டிப்பாக.

324
00:24:52,116 --> 00:24:53,451
என்ன பிரச்சனை என அவளிடம் கேள்.

325
00:24:54,410 --> 00:24:57,455
இல்லை, தெரியாது, இன்னும்
அவளுடன் அவ்வளவு நெருக்கமாக பழகவில்லை.

326
00:24:57,580 --> 00:24:59,373
-எனக்கு தெரியாது.
-நீ அவளை பின்தொடரணும்.

327
00:25:01,083 --> 00:25:02,168
-என்ன?
-ஆமாம்.

328
00:25:02,501 --> 00:25:04,253
அவள் எங்கு போகிறாளென
தெரிய வேண்டாமா?

329
00:25:04,879 --> 00:25:06,839
அவள் தன் காதலனுடன் இருந்தால்?

330
00:25:11,761 --> 00:25:13,221
நான் அவளை பின்தொடர மாட்டேன்.

331
00:26:30,840 --> 00:26:32,216
நான் உன்னைத் தேடலாம்.

332
00:26:32,341 --> 00:26:34,802
நிச்சயமாக, என்னால் உன்னை பார்க்க முடியாது.

333
00:26:35,761 --> 00:26:37,305
உன்னிடம் சொல்வதற்கு,

334
00:26:38,264 --> 00:26:40,766
தயக்கமாக இருந்தது...

335
00:26:43,686 --> 00:26:47,356
டாமினிக் ஹென்றி சாயர்
2001-2018

336
00:26:47,523 --> 00:26:50,401
"நாம் பிரிந்து செல்பவர்களின் மனதில்
வாழ்வது மரணம் கிடையாது."

337
00:26:57,700 --> 00:26:59,660
டாமினிக் சாயர்
கிழக்கு ரிவர் கார் விபத்து

338
00:26:59,785 --> 00:27:01,996
இன்டர்ஸ்டேட் விபத்தில்
பதின்பருவ ஆண் கொல்லப்பட்டார்

339
00:27:02,121 --> 00:27:05,124
பாலிசேட்ஸ் இன்டர்ஸ்டேட் சாலையில்
கொல்லப்பட்ட பதின்பருவ ஆண்...

340
00:27:05,249 --> 00:27:08,002
டாமினிக் சாயர், 17 வயது,
அந்த இடத்திலேயே மரணம் அடைந்தார்

341
00:27:10,796 --> 00:27:13,215
கிழக்கு ரிவர் பிரேபரேட்டரி மேல்நிலை பள்ளி
மாணவன் டாமினிக் சாயர்

342
00:27:13,341 --> 00:27:15,718
புதன்கிழமை, கார் விபத்தில் இறந்ததால்
பள்ளி மூடப்பட்டது

343
00:27:15,843 --> 00:27:18,429
அவருடன் வந்த பயணிக்கு பலத்த காயம்
என மாநில காவல் துறை கூறுகிறது.

344
00:27:18,554 --> 00:27:21,182
மூன்று நட்சத்திர வீரர், மற்றும்
சாயரின் பள்ளி பயிற்சியாளரும் ஆன,

345
00:27:21,307 --> 00:27:24,060
சார்லஸ் பேக்கர், அவர் ரொம்ப புத்திசாலியான,
அன்பான, திறமை வாய்ந்த மாணவன்

346
00:27:24,185 --> 00:27:25,603
என்று நினைவு கூர்ந்தார்.

347
00:27:29,231 --> 00:27:31,984
சிலர் சிறந்தவர்களாக பிறக்கின்றனர்,சிலர்
சிறந்தவர்களாகின்றனர்-ஷேக்ஸ்பியர்

348
00:27:32,318 --> 00:27:34,111
தெரியாது என்பது தான் தெரியும்
லியோ டால்ஸ்டாய்

349
00:27:34,278 --> 00:27:36,822
வரையறுப்பது வரம்புக்குட்பட்டது
-ஆஸ்கர் வைல்ட்,டோரியன் க்ரெயின் படம்

350
00:27:36,989 --> 00:27:39,950
"என் முழு இதயத்தாலும் உன்னை காதலிப்பதால்
கண்டனம் தெரிவிக்க எதுவுமில்லை"

351
00:27:40,076 --> 00:27:40,993
வில்லியம் ஷேக்ஸ்பியர்

352
00:27:44,080 --> 00:27:46,082
ஏதாவது தீம்கள் பற்றி பேசுவதற்கு

353
00:27:46,332 --> 00:27:48,667
-நீ பிறகு வரமுடியுமா?
-நீ எதை தேர்வு செய்தாலும் சரி.

354
00:27:50,628 --> 00:27:51,545
சரி.

355
00:27:54,131 --> 00:27:55,132
நாம் வந்து, அது...

356
00:27:56,175 --> 00:27:57,760
என் இறுதி தேர்வுகளை காண்பிக்கிறேன்,
பிறகு--

357
00:27:57,927 --> 00:27:59,637
வந்து, அதில் எனக்கு எந்த அக்கறையும் இல்லை.

358
00:27:59,929 --> 00:28:01,722
ஜேட்டிடம் இருந்து
ஒரு புது பதிப்பு வந்திருக்கு,

359
00:28:01,847 --> 00:28:03,307
அதனால் அதை தொகுக்கப் போகிறேன்.

360
00:28:12,024 --> 00:28:13,609
மஸ்ஸிடமிருந்து தகவல்.

361
00:28:13,734 --> 00:28:16,987
இப்போது கிரேஸ் ஏதோ குழப்பமான ஒன்றை
செய்வதை எல்க்ஸ் பார்த்தான்.

362
00:28:17,196 --> 00:28:18,823
நீ இப்பொழுதே கிளம்பு சகோ.

363
00:28:22,410 --> 00:28:26,330
எனக்கு அவற்றை பொறுத்த ஆசை,
ஆனால் நான் இவற்றை பொறுத்துகிறேன்.

364
00:28:26,831 --> 00:28:28,165
ஹேய், அப்பா, நான் காரை பயன்படுத்தலாமா?

365
00:28:29,166 --> 00:28:30,543
சரி. எங்கே போகிறாய்?

366
00:28:33,754 --> 00:28:34,922
தெரியாது. உண்மையில், எங்குமில்லை.

367
00:28:35,214 --> 00:28:36,924
ஆக, நீ எங்கே போகிறாய்?

368
00:28:37,466 --> 00:28:39,009
இது குறுக்கு விசாரணை அல்ல.

369
00:28:39,844 --> 00:28:41,429
வந்து, அப்படி தான் தோன்றுகிறது.

370
00:28:42,471 --> 00:28:44,265
சரி, எங்களது காரை
கொடுக்க சொல்லி கேட்கிறாய்,

371
00:28:44,390 --> 00:28:46,142
பதிலுக்கு நாங்கள் ஒரு சாதாரண
கேள்வி கேட்கிறோம்.

372
00:28:46,267 --> 00:28:49,687
சரி, வந்து... எனக்கு தெரியவில்லை.
நான் மஸ் வீட்டிற்கு போகப் போகிறேன்.

373
00:28:49,854 --> 00:28:51,439
சாவி கிடைக்குமா?
நீங்கள் உபயோகிப்பதே இல்லையே.

374
00:28:52,982 --> 00:28:54,608
உன் விஷயத்தில் தலையிட மாட்டோம்.

375
00:28:54,733 --> 00:28:56,694
நாங்கள் அறிய கூடாது என்றால்,
சொல்லி விடு.

376
00:28:57,361 --> 00:28:59,238
ஆனால் பொய் சொல்லி எங்களை ஏமாற்றாதே.

377
00:28:59,363 --> 00:29:00,489
அது ரொம்பவும் மோசம்.

378
00:29:01,824 --> 00:29:03,367
நீ... வாடகை காரில் போ.

379
00:29:03,659 --> 00:29:05,453
என்ன? முடியாது.
என்னிடம் கிரெடிட் கார்ட் இல்லை.

380
00:29:05,911 --> 00:29:07,663
அப்போ, நீ நடந்து தான் போகணும்.

381
00:29:53,709 --> 00:29:54,543
அடச்சே!

382
00:30:24,698 --> 00:30:28,035
ஹேய், நான்தான் ஹென்றி. ஏதும் பிரச்சனை
இல்லையே? நீ இன்று ஏதோ சரியில்லை.

383
00:30:32,331 --> 00:30:34,208
இப்போது நன்றாக இருக்கிறேன் நன்றி.

384
00:30:36,126 --> 00:30:40,339
நாளை செய்தித்தாளிற்கு பின் நூலகத்தில்
சந்திக்கலாமா?ஒரு யோசனை இருக்கு...

385
00:30:43,926 --> 00:30:45,636
அங்கே சந்திக்கலாம்

386
00:30:55,938 --> 00:30:57,398
-ஹாய்.
-ஹே. என்ன விஷயம்?

387
00:30:57,815 --> 00:30:59,525
நேற்று இரவு தூங்க முடியாததால்,

388
00:30:59,650 --> 00:31:01,735
திருமதி. க்ளீனின் பாடத்திட்டங்ககளை

389
00:31:01,860 --> 00:31:05,781
தேடி பார்த்ததில்,
ஒரு சுவாரஸ்யமான விஷயத்தைப் பார்த்தேன்.

390
00:31:13,205 --> 00:31:14,415
-அவற்றைப் பார்.
-சரி.

391
00:31:14,540 --> 00:31:16,000
இளம் வெர்த்தேரின் துயரங்கள்

392
00:31:16,125 --> 00:31:17,418
ரோமியோ & ஜூலியட்

393
00:31:17,543 --> 00:31:18,419
சரி...

394
00:31:19,295 --> 00:31:20,212
த காட்சர் இன் த ரியா

395
00:31:20,337 --> 00:31:21,755
இவை இளைஞர்களை பற்றியதா?

396
00:31:21,922 --> 00:31:23,048
இவை தற்கொலை பற்றியவை.

397
00:31:23,215 --> 00:31:24,091
சாதாரண மக்கள்

398
00:31:24,550 --> 00:31:26,677
ரோமியோவும் ஜூலியட்டும்
தற்கொலை செய்துகொள்வார்கள்.

399
00:31:26,802 --> 00:31:27,970
வெர்த்தேர் சுட்டுக் கொள்வார்.

400
00:31:28,095 --> 00:31:29,555
ஹோல்டன் தற்கொலை செய்ய நினைக்கிறார்.

401
00:31:29,680 --> 00:31:32,182
கொன்ராட் தன் மணிக்கட்டை கீறி
தற்கொலை செய்ய முயற்சி செய்கிறான்.

402
00:31:34,268 --> 00:31:36,186
இதை பற்றித்தான் நேற்றிரவு
யோசித்து கொண்டிருந்தாயா?

403
00:31:36,729 --> 00:31:37,563
ஆமாம்.

404
00:31:39,607 --> 00:31:41,525
-அது சாதாரணமானதா?
-அடக்கடவுளே.

405
00:31:41,692 --> 00:31:42,568
என்ன?

406
00:31:44,111 --> 00:31:44,987
நீ...

407
00:31:46,780 --> 00:31:50,242
நீ, இந்த வாரம் சிறிது வருத்தமாக இருந்தாய்,

408
00:31:50,367 --> 00:31:52,453
-அது எனக்கு கொஞ்சம் பயமாக இருந்தது.
-சரி.

409
00:31:54,788 --> 00:31:56,081
இதை எப்படி விவரிப்பது?

410
00:31:58,709 --> 00:32:02,004
சரி. ஒரு பதின்பருவத்தினருக்கு என்ன
தோன்றும் என்று நினைத்துப் பார்.

411
00:32:02,504 --> 00:32:05,716
சரியா? உன் பெற்றோர்கள்
நீ வெற்றி பெற வற்புறுத்துவார்கள்.

412
00:32:05,841 --> 00:32:07,593
நீ விரும்பாத விஷயங்களை செய்யும் படி

413
00:32:07,718 --> 00:32:09,428
உன் நண்பர்கள் வற்புறுத்துவார்கள்.

414
00:32:09,845 --> 00:32:11,847
சமூக தளங்கள் நம் உடலை
வெறுக்கும்படி வற்புறுத்தும்.

415
00:32:12,348 --> 00:32:15,017
ஒரு நல்ல குடும்பத்தில் இருந்து வந்த,
நல்ல பையனாக

416
00:32:15,142 --> 00:32:17,269
-இருந்தாலும் அது கடினமாக இருக்கும்.
-சரி.

417
00:32:17,603 --> 00:32:20,856
ஆக, ரோமியோ மற்றும் ஜூலியட்
அல்லது வெர்த்தேர் போல

418
00:32:20,981 --> 00:32:23,275
நீ காதலிக்கும் நபரோடு,
வாழ முடியாது, அல்லது

419
00:32:23,400 --> 00:32:25,152
ஹோல்டன் அல்லது கொன்ராட் போல,

420
00:32:25,444 --> 00:32:27,196
நீ காதலிக்கும் நபரை இழந்ததாக கற்பனை செய்.

421
00:32:27,363 --> 00:32:29,990
ஷேக்ஸ்பியரில் இருந்து சாலிங்கர் வரை உள்ள

422
00:32:30,199 --> 00:32:33,202
ஒவ்வொரு எழுத்தாளரும், இளைஞர்களைப்
பற்றி எழுத, ஒரு காரணம் இருக்கு

423
00:32:33,327 --> 00:32:35,954
அவர்களால் உண்மையை சொல்லாமல்
இருக்க முடியாது, வந்து...

424
00:32:37,039 --> 00:32:40,084
இளமையாக இருப்பது எவ்வளவு கஷ்டமானது,

425
00:32:40,459 --> 00:32:44,421
அது உணருவதற்கு மிகவும் துயரமானது
என்ற உண்மையை.

426
00:32:46,006 --> 00:32:47,257
நீ தற்கொலை செய்ய...

427
00:32:49,468 --> 00:32:50,719
நினைக்கிறாயா இல்லை...?

428
00:32:50,928 --> 00:32:52,638
இல்லை. கடவுளே. அதாவது...

429
00:32:53,931 --> 00:32:55,766
பார், நான் தற்கொலை செய்ய மாட்டேன்.

430
00:32:56,100 --> 00:32:58,102
ஆனால் இங்கே இல்லாமல் போவது
எப்படி இருக்கும் என

431
00:32:58,227 --> 00:33:00,270
நினைத்துப் பார்த்து இருக்கிறேன் தெரியுமா?

432
00:33:01,605 --> 00:33:02,564
ஆமாம்.

433
00:33:03,273 --> 00:33:06,944
நான் அதை சாதாரணமாக சொல்லவில்லை,
ஆனால் ஏன் சொல்கிறேன் என்றால்,

434
00:33:07,236 --> 00:33:10,948
அதை சொல்லாமல் மறைப்பது
எல்லாவற்றையும் மோசமாக்கி விடுகிறது.

435
00:33:11,323 --> 00:33:12,533
அது பேசப்பட வேண்டும்.

436
00:33:12,658 --> 00:33:14,535
நம் கஷ்டங்கள் எல்லாமே
பேசப்பட வேண்டும்.

437
00:33:17,287 --> 00:33:21,041
பதின்பருவ வருடங்கள்... குழப்பமானவை.

438
00:33:21,166 --> 00:33:25,087
நாம் குழந்தையும் இல்லை
வயது வந்தவரும் இல்லை,

439
00:33:25,212 --> 00:33:28,549
மற்றும் உலகம் நம்மை மன முதிர்ச்சியோடு
நடந்து கொள்ள சொல்கிறது

440
00:33:28,674 --> 00:33:30,801
ஆனால் அப்படி செய்யும்
அடுத்த நிமிடமே,

441
00:33:30,926 --> 00:33:32,094
நம் வாயை மூட சொல்கிறது.

442
00:33:33,470 --> 00:33:34,430
அது என்னவென்றால்

443
00:33:34,555 --> 00:33:37,433
வயது முதிர்ந்தவர்கள் இந்த பதின்பருவ
குழப்பங்களிலிருந்து அதிர்ஷ்டவசமாக

444
00:33:37,558 --> 00:33:39,268
தப்பித்த மன பாதிப்புக்குள்ளான குழந்தைகளே.

445
00:33:40,269 --> 00:33:41,353
அதனால் தான்...

446
00:33:43,313 --> 00:33:47,526
நமது இறுதி பதிப்பின் தீம்
"பதின்பருவ குழப்பம்" என இருக்க வேண்டும்.

447
00:33:54,575 --> 00:33:56,869
ஹென்றியின் சகோதரி நரம்பியல் சிகிச்சை
நிபுணருக்கு படிக்கிறாள்,

448
00:33:57,035 --> 00:34:00,831
அதனால் அவள் ஒரு பதின்பருவ மனிதனின் மூளை

449
00:34:00,956 --> 00:34:04,376
அவன் பெரியவனாவதற்கு முன்னால்
மேம்படும் என்று விளக்கினாள்.

450
00:34:05,294 --> 00:34:09,214
ஆக, அந்த மேம்படுத்தல், தொடர்புகள் மற்றும்
நரம்புகளின் விரிவாக்கத்தினால் ஏற்படும்

451
00:34:09,465 --> 00:34:12,009
அப்போது எது சரி என நம்மால்
கண்டுபிடிக்க முடியும்.

452
00:34:13,969 --> 00:34:14,928
அல்லது தவறை.

453
00:34:15,262 --> 00:34:17,055
நமக்கு பிடித்தது அல்லது பிடிக்காததை.

454
00:34:17,181 --> 00:34:19,183
நாம் யாராக இருக்க விரும்புகிறோம் என்பதை.

455
00:34:19,475 --> 00:34:21,518
இதழின் ஒவ்வொரு பக்கமும்

456
00:34:21,769 --> 00:34:25,314
மூளை தானே சுறுசுறுப்பாக்கும்,
தன்னைத் தானே கண்டுபிடிக்கும்,

457
00:34:25,606 --> 00:34:29,485
இறுதியில் இடைநிலையை கடக்கும் வரை.

458
00:34:30,486 --> 00:34:31,528
மிகவும் அற்புதம்.

459
00:34:33,447 --> 00:34:34,364
அற்புதம்.

460
00:34:35,073 --> 00:34:36,742
சரி. அருமை.

461
00:34:39,203 --> 00:34:41,997
ஆக, நாம் எதைப் பற்றி குழப்பமடைகிறோம்,

462
00:34:42,331 --> 00:34:46,043
நம்மை எது பயமுறுத்துகிறது...
என்பது போன்ற ஒரு விவாதத்தைத்

463
00:34:46,335 --> 00:34:48,045
தொடங்கலாம் என்று நான் நினைக்கிறேன்.

464
00:34:49,797 --> 00:34:52,216
அதாவது, நிறைய விஷயங்கள் இருக்கலாம்

465
00:34:52,341 --> 00:34:54,218
வெளியே சொல்ல பயப்படும் ஒரு விஷயம்...

466
00:34:58,639 --> 00:34:59,890
உனக்கு அப்படி ஏதாவது இருக்கா?

467
00:35:06,230 --> 00:35:07,815
ஆம், இருக்கு, ஆனால் நான் அதை...

468
00:35:08,524 --> 00:35:11,693
நான் அதை எழுதலாம் என நினைக்கிறேன்... ஆக...

469
00:35:23,664 --> 00:35:26,542
சில ஆண்டுகளுக்கு முன்,
மைக் ஜான்சன் தற்கொலை செய்துக் கொண்ட போது,

470
00:35:28,836 --> 00:35:31,630
இன்னும் அது இருக்கிறது
என்பதை உணர்ந்தேன்...

471
00:35:33,340 --> 00:35:36,009
13 வயதில் அவர் எனக்குக் கொடுத்த
ஹஸ்ட்லர் பத்திரிகை,

472
00:35:36,134 --> 00:35:38,971
அது அவர் தனது அப்பாவிடம் திருடியது.

473
00:35:39,096 --> 00:35:40,013
மேலும்...

474
00:35:43,851 --> 00:35:45,102
எனக்குத் தெரியலை.

475
00:35:45,227 --> 00:35:47,646
இதை ஒப்புக்கொள்வது
முட்டாள்தனம் போல் தோன்றுகிறது,

476
00:35:47,855 --> 00:35:51,400
ஆனால்... நான் பயந்துவிட்டேன்.

477
00:35:51,525 --> 00:35:54,695
அந்த பத்திரிக்கையை
என் மேஜையில் வைத்துக்கொண்டு

478
00:35:54,820 --> 00:35:57,573
இரவில் என்னால் தூங்க முடியவில்லை.

479
00:35:59,449 --> 00:36:00,784
அது ஒரு வகையில்...

480
00:36:02,619 --> 00:36:04,037
பேய் போன்ற ஏதோ ஒன்று போல.

481
00:36:07,666 --> 00:36:09,293
அடிப்படையில், அது ஒரு வகையில்

482
00:36:09,418 --> 00:36:11,712
தூக்கி எறிய கூடாத முக்கியமான விஷயம், ஆனால்

483
00:36:11,837 --> 00:36:13,714
அதை வைத்துக்கொள்ளவும்
வினோதமாக இருந்தது

484
00:36:13,839 --> 00:36:19,386
எனவே கலை பூங்காவில்,

485
00:36:20,846 --> 00:36:24,683
அவர் தன் உயிரை மாய்த்துக் கொண்ட
மரத்திற்கு அருகில்

486
00:36:24,808 --> 00:36:29,438
அதை நான் புதைத்துவிட்டேன்.

487
00:36:32,816 --> 00:36:33,817
அப்புறம்...

488
00:36:36,445 --> 00:36:37,404
ஆம்.

489
00:36:39,698 --> 00:36:41,033
எனக்கு தெரியலை. அது வித்தியாசமானது,

490
00:36:41,158 --> 00:36:42,534
காரணம், முதல்முறை,

491
00:36:42,659 --> 00:36:45,078
மரணத்தைப் பற்றி புரிந்துகொள்ளும்
அளவுக்கு நான் வளர்ந்துவிட்டேன்,

492
00:36:45,579 --> 00:36:49,708
ஆனால் நான்... இளம் வயதினனாகவும் இருந்தேன்,

493
00:36:49,833 --> 00:36:53,503
இது எல்லாம் அந்த ஒரு
ஆபாச பத்திரிகையால் வந்தது.

494
00:37:02,262 --> 00:37:03,889
நீ அதை பகிர்ந்ததால் பெருமை அடைகிறேன்.

495
00:37:04,097 --> 00:37:05,891
அது உனக்கு ரொம்ப கஷ்டமாக இருந்திருக்கும்.

496
00:37:06,892 --> 00:37:07,726
நன்றி.

497
00:37:08,518 --> 00:37:09,978
ஹேய், நீ ஏன் எழுதுவதை நிறுத்திவிட்டாய்?

498
00:37:10,103 --> 00:37:12,272
சொல்லப் போனால் உன்னிடம்
நிறைய யோசனைகள் உள்ளன.

499
00:37:13,857 --> 00:37:17,903
எனக்கு மிகவும் முக்கியமான நபர் ஒருவர்...
இறந்துவிட்டார்.

500
00:37:19,613 --> 00:37:20,572
அப்புறம்...

501
00:37:21,907 --> 00:37:25,327
நான் எழுத்தாளர் என்பது
எல்லோருக்கும் தெரிந்திருந்ததால்,

502
00:37:25,452 --> 00:37:29,623
புகழுரை போன்று எதையாவது எழுத,
ஏதாவது சொல்லும்படி என்னிடம் கேட்டனர்,

503
00:37:29,748 --> 00:37:34,127
மேலும், என் வார்த்தைகள் அவ்வளவு அழகாக
இருக்கின்றன என்று சொன்னார்கள், ஆனால்...

504
00:37:37,881 --> 00:37:39,633
ஒன்றும் வரவில்லை.

505
00:37:39,758 --> 00:37:41,385
என்னால் வார்த்தைகளை கண்டறிய முடியவில்லை.

506
00:37:46,932 --> 00:37:47,808
என்ன?

507
00:37:49,810 --> 00:37:50,936
அட, இல்லை. இது வேடிக்கையானது.

508
00:37:52,270 --> 00:37:54,356
ஏன்னா, பேசும்போது எனக்கு
வார்த்தைகள் வராது,

509
00:37:54,481 --> 00:37:56,441
எழுதும்போது உனக்கு
வார்த்தைகள் வராது.

510
00:37:58,735 --> 00:38:00,112
அதை நினைத்து சிரித்தேன்.

511
00:38:01,405 --> 00:38:02,489
சொல்வது புரிகிறதா?

512
00:38:12,332 --> 00:38:13,917
எப்படியிருந்தாலும், நன்றி.

513
00:38:16,420 --> 00:38:18,463
-அதை குடிக்க வேண்டாம்.
-எனக்கும் வேண்டாம்.

514
00:38:18,588 --> 00:38:20,298
-ஆமாம், நான் அறிந்திருக்கணும்...
-ஆம்.

515
00:38:25,178 --> 00:38:26,888
இந்த வாரயிறுதியில் படம் பார்க்கலாமா?

516
00:38:27,389 --> 00:38:28,890
என்னால் முடியாது.

517
00:38:30,392 --> 00:38:31,685
வேறு திட்டங்கள் இருக்கா?

518
00:38:32,144 --> 00:38:34,271
இல்லை, நான் செய்ய ஆயிரம் வேலைகள் இருக்கு.

519
00:38:37,357 --> 00:38:38,859
நீ ஓட்டபந்தயத்தில் ஓடுவாயா?

520
00:38:38,984 --> 00:38:40,819
ஆமாம், நான் ஒரு ஓட்டப்பந்தய வீராங்கனை.

521
00:38:41,403 --> 00:38:43,739
உன் முந்திய வாழ்க்கையில்
நீ வேறு என்னவெல்லாம் செய்தாய்?

522
00:38:44,614 --> 00:38:45,782
அடக் கடவுளே.

523
00:38:45,907 --> 00:38:48,410
இலக்கிய பத்திரிக்கை,
ஊழியர்கள் ஆண்டு புத்தகம்,

524
00:38:48,535 --> 00:38:49,828
மாணவர் அரசாங்கம்,

525
00:38:50,412 --> 00:38:52,205
பீர் பாங் வெற்றியாளர்.

526
00:38:55,959 --> 00:38:58,503
வெள்ளிக்கிழமை இரவு முதல் கால்பந்து ஆட்டம்,
வேண்டுமென்றால் நீ போ.

527
00:38:58,670 --> 00:39:00,547
எனக்கு ஆர்வமில்லை,
ஆனாலும் வேடிக்கையாக இருக்கும்.

528
00:39:00,756 --> 00:39:02,841
வழக்கமாக முன்கூட்டியே விளையாடுவோம்,
எல்லோரும் போவார்கள்.

529
00:39:02,966 --> 00:39:05,052
வேடிக்கையானது தான்,
ஆனாலும் என்னால் முடியாது.

530
00:39:05,302 --> 00:39:06,762
இன்னொரு முறை பார்க்கலாம்.

531
00:39:08,805 --> 00:39:11,516
நீ இதுவரை செய்திலேயே மோசமான செயல்
என்று எதை சொல்வாய்?

532
00:39:12,309 --> 00:39:13,560
முதலாம் வகுப்பில்,

533
00:39:13,685 --> 00:39:15,854
பென்சிலை கூர்படுத்துவதில்
என் விரலை வைத்ததாக இருக்கலாம்.

534
00:39:15,979 --> 00:39:18,315
அது அவ்வளவு சரியாக நடக்கவில்லை.

535
00:39:18,565 --> 00:39:20,817
என்ன நடக்கும் என்று நினைத்தாய்?

536
00:39:21,234 --> 00:39:23,570
அது என் நகத்தை வெட்டும்
என்று நினைத்தாக ஞாபகம்.

537
00:39:35,874 --> 00:39:37,542
நான் மற்றவர்களோடு எளிதில் பழகிவிடுவேன்.

538
00:39:37,667 --> 00:39:39,753
அதாவது, நான் எப்போதும் அப்படித்தான்.

539
00:39:40,003 --> 00:39:41,213
எது மாற்றியது?

540
00:39:41,338 --> 00:39:44,091
நான் குறிப்பிட்ட கண்ணோட்டத்தை
நிறுத்திவிட்டேன்.

541
00:39:44,216 --> 00:39:48,261
சில நேரங்களில் நாமாகவே
இருண்ட படுகுழிக்குள் சென்று,

542
00:39:48,386 --> 00:39:50,388
உலகம் இருப்பதை மறந்து விடுவது எளிது.

543
00:39:52,557 --> 00:39:54,309
ஆம், சில சமயம்
உன்னில் அவளைப் பார்க்கிறேன்,

544
00:39:54,434 --> 00:39:58,647
நீ நீயாக இருந்த அந்த பெண்ணின் வெளிச்சத்தை.

545
00:39:59,731 --> 00:40:01,983
ஆனால் அவளாக நடித்து, இப்போது
நீ நீயாகவே இருக்கிறாயா,

546
00:40:02,109 --> 00:40:04,069
அல்லது மீண்டும் நீயாக இருப்பதில் நன்றாக

547
00:40:04,194 --> 00:40:06,947
உணரும் வரை எனக்கு தெரிந்த
கிரேஸ் போல நடித்தாயா?

548
00:40:08,615 --> 00:40:10,575
எனக்கு தெரியலை. மனிதர்கள் மாறுகிறார்கள்.

549
00:40:11,368 --> 00:40:13,328
14 வயதில் இருந்த மாதிரியே நாம்

550
00:40:13,453 --> 00:40:14,830
இருப்பதற்கு வாய்ப்பே இல்லை.

551
00:40:26,633 --> 00:40:27,467
ஹேய்...

552
00:40:30,095 --> 00:40:30,971
என்ன?

553
00:40:33,431 --> 00:40:34,933
சரி, ஹெஸ்லின் தனது வருடாந்திர

554
00:40:35,058 --> 00:40:36,893
ஹாலோவீன் விருந்தை
நாளை இரவு நடத்துகிறான்.

555
00:40:37,102 --> 00:40:39,354
வந்து, இது ஒரு பெரிய விஷயமாக
இருக்க வேண்டியதில்லை.

556
00:40:39,479 --> 00:40:41,398
ஊர் சுற்றுவது போன்ற எதுவாகவும்
இருக்க வேண்டியதில்லை.

557
00:40:41,523 --> 00:40:42,816
காரணம் அதுவல்ல.

558
00:40:43,066 --> 00:40:44,484
-இது வந்து...
-காரணம் அதுவல்ல.

559
00:40:44,651 --> 00:40:47,737
...ஒருவேளை... வேடிக்கையாக இருக்கலாம்.

560
00:40:47,863 --> 00:40:51,074
இது நல்லது தான்... உனக்கு நல்லது,

561
00:40:51,324 --> 00:40:54,744
பழைய கிரேஸ் விஷயங்களை மீண்டும்
செய்யத் தொடங்குவதற்கு நல்லது

562
00:40:55,871 --> 00:40:57,873
அட, புதிய கிரேஸ்

563
00:40:58,748 --> 00:41:00,917
உனக்கு போதவில்லையா அல்லது...?

564
00:41:02,711 --> 00:41:04,796
இல்லை, இல்லை, நான் அப்படி சொல்லவில்லை.

565
00:41:05,672 --> 00:41:07,048
இல்லை, நான் நினைக்கிறேன்...

566
00:41:07,549 --> 00:41:08,633
ஹேய், ஹேய்.

567
00:41:09,926 --> 00:41:10,844
போகலாம்.

568
00:41:14,055 --> 00:41:16,224
-அப்படியா?
-ஆமாம்.

569
00:41:26,568 --> 00:41:27,777
உன்னுடைய சாவிகள்.

570
00:41:29,654 --> 00:41:30,780
நான் உள்ளே வரலாமா?

571
00:41:33,825 --> 00:41:35,243
நீ வேறு எங்கும் போக வேண்டியதில்லையா?

572
00:41:36,203 --> 00:41:41,291
இல்லை, நான் போக வேண்டிய இடத்திற்கு,
இன்று நான் போகவில்லை, எனவே...

573
00:41:44,211 --> 00:41:45,545
-சரி, தாராளமாக, வா.
-சரியா?.

574
00:41:45,670 --> 00:41:46,880
ஆம், உள்ளே வா.

575
00:41:52,552 --> 00:41:54,179
-இரண்டு கொடு.
-அவள் மடிக்கமாட்டாள். இரு.

576
00:41:54,304 --> 00:41:56,181
-மூன்று எடுத்துக்கொள்கிறேன்.
-எடுத்துக்கொள். இதோ.

577
00:41:57,307 --> 00:41:58,683
-ஹேய், என்ன நடக்கிறது?
-ஹேய், ஹென்றி.

578
00:41:58,808 --> 00:41:59,643
ஹேய்.

579
00:42:00,268 --> 00:42:02,062
-சேர்ந்துகொள், நண்பா.
-இப்போது முடியாது.

580
00:42:02,187 --> 00:42:03,521
சரி இவள் தான் கிரேஸ்.

581
00:42:06,608 --> 00:42:08,318
-ஹாய்.
-ஹாய்!

582
00:42:08,985 --> 00:42:09,861
இவள் கிரேஸ்!

583
00:42:09,986 --> 00:42:10,862
-ஆம்.
-ஆம்.

584
00:42:10,987 --> 00:42:11,863
நீ உள்ளே வந்தவிட்டாய்.

585
00:42:11,988 --> 00:42:13,823
இப்போது வரை
உன் காரை மட்டுமே பார்த்துள்ளோம்.

586
00:42:24,251 --> 00:42:26,711
இவற்றை எடுத்து வைக்கிறேன்.

587
00:42:57,909 --> 00:42:59,327
இது எப்படி உடைந்தது?

588
00:43:02,789 --> 00:43:04,958
நான்தான் உடைத்துவிட்டேன்.

589
00:43:06,668 --> 00:43:08,044
இது தான் கிண்ட்சுக்குரோய்.

590
00:43:08,169 --> 00:43:11,256
இது பழைய பள்ளி பானியிலுள்ள,
ஜப்பானிய கலை வடிவமாகும்,

591
00:43:11,381 --> 00:43:14,342
அதில் உடைந்த மட்பாண்டங்களை
தங்கத் துகள்களோடு இணைக்கிறார்கள்.

592
00:43:55,425 --> 00:43:57,594
பொறு, இது அதுவா...?

593
00:43:59,721 --> 00:44:02,265
அட, இது உன் காரில்
நீ கேட்க விரும்பும் பாடல்.

594
00:44:06,227 --> 00:44:07,312
ஏதும் பிரச்சனை இல்லையே?

595
00:44:09,230 --> 00:44:11,191
நீ ஏன் இதை ஒலிக்கச் செய்தாய்?

596
00:44:11,566 --> 00:44:13,568
வந்து, தெரியலை.
எனக்கு பிடிச்சிருக்கு. நான்...

597
00:44:14,069 --> 00:44:15,904
அது நம்மை நினைவூட்டுவதாக
நினைக்கிறேன்.

598
00:44:31,503 --> 00:44:32,921
ஹேய்.

599
00:44:33,213 --> 00:44:34,923
கிரேஸ், அதற்காக மன்னிச்சிடு.
எனக்கு தெரியாது.

600
00:44:35,048 --> 00:44:36,007
நான்... எனக்குத் தெரியாது.

601
00:44:36,174 --> 00:44:38,301
நாம் காரில் போகும் போது
எப்போதும் கேட்போம்,

602
00:44:38,426 --> 00:44:40,887
உனக்கு பிடிக்குமென நினைத்தேன்.
-சரி, அது நமக்கான பாடல் கிடையாது.

603
00:44:41,012 --> 00:44:42,389
-சரி.
-அது நமக்கானது கிடையாது.

604
00:44:42,514 --> 00:44:44,224
சரி. அது யாருக்கானது? என்ன அது?

605
00:44:44,724 --> 00:44:45,558
டாம்.

606
00:44:46,601 --> 00:44:48,269
அவன் என்னுடைய காதலன்.

607
00:44:49,187 --> 00:44:52,107
அவன் தான் காரை ஓட்டினான்,
நான் முட்டியை உடைத்துக் கொண்டேன்,

608
00:44:52,232 --> 00:44:56,403
-ஆனால் அவன்...
-ஓ. மன்னிச்சிடு. எனக்கு...

609
00:44:59,614 --> 00:45:01,074
எனக்கு புரிகிறது,
நீ விரும்பாவிட்டால்...

610
00:45:01,199 --> 00:45:02,867
என்னுடன் எதுவும் செய்ய வேண்டாமென்றால்--

611
00:45:18,508 --> 00:45:19,384
ஹேய்.

612
00:45:20,260 --> 00:45:22,095
ஹேய், உன்னை வீட்டிற்கு
அழைத்து செல்ல அனுமதிப்பாயா?

613
00:45:22,220 --> 00:45:23,721
-தயவுசெய்து, வேண்டாம், ஹென்றி.
-ஏன்?

614
00:45:23,847 --> 00:45:25,849
-நான் ஏமாந்துவிட்டதால், சரியா?
-விடு. என்னவாயிற்று?

615
00:45:25,974 --> 00:45:28,476
-உன்னை வீட்டிற்கு அழைத்து செல்லவா?
-சரி. வேண்டாம். தயவுசெய்து.

616
00:45:28,601 --> 00:45:29,936
-தயவுசெய்து? வா.
-வேண்டாம்.

617
00:45:30,145 --> 00:45:31,563
-ஏன்?
-குழப்பமாக இருக்கு, ஹென்றி.

618
00:45:31,771 --> 00:45:33,273
-எனக்கு கவலையில்லை.
-இல்லை! அப்படி இல்லை!

619
00:45:34,149 --> 00:45:37,902
நான் உனக்கு ஏற்றவளல்ல என
நீ உணரும்போது அப்படி இருக்காது, சரியா?

620
00:46:08,766 --> 00:46:10,393
இது இங்கே இருக்கணும் என நினைக்கிறீர்களா?

621
00:46:10,518 --> 00:46:11,686
-இல்லை.
-நீ சொல்வது சரி.

622
00:46:11,936 --> 00:46:13,438
எப்படியும் நமக்கு இது தேவைப்படாது.

623
00:46:13,563 --> 00:46:15,023
-அது சரி வராது.
-சரி. நிஜமாகவா?

624
00:46:15,148 --> 00:46:18,026
ஹேய், நண்பர்களே, இன்றிரவு
ஹெஸ்லின் வீட்டுக்கு போகிறீர்களா?

625
00:46:18,151 --> 00:46:19,235
-ஆம்.
-இருக்கலாம்.

626
00:46:20,111 --> 00:46:22,197
-நாங்கள் வரக்கூடும்.
-நல்லது. சரி,

627
00:46:22,614 --> 00:46:23,823
வருவீர்களென நம்புகிறேன்.

628
00:46:28,411 --> 00:46:29,829
எல்க்ஸ் எப்போது
நம்மை அழைத்து செல்வார்?

629
00:46:31,956 --> 00:46:33,666
தெரியாது. நான் போகவில்லை, அதனால்...

630
00:46:33,791 --> 00:46:36,336
இல்லை. இல்லை, இல்லை, இல்லை. நாம் போகிறோம்.

631
00:46:36,586 --> 00:46:37,795
என்னை போல, தேவதை

632
00:46:37,921 --> 00:46:39,631
சாம்ராஜ்யத்தின் பகுதியாக இருக்கும்
ஒரு அழகி,

633
00:46:39,756 --> 00:46:42,091
என்னை அவளது மாயமான,
மயக்கும் காட்டுக்கு அழைத்திருக்கிறாள்.

634
00:46:42,342 --> 00:46:45,220
இந்த வாய்ப்பை நான்
பறப்பதற்கு பயன்படுத்தப் போகிறேன்.

635
00:46:45,345 --> 00:46:46,221
அடப் போங்கப்பா.

636
00:46:46,930 --> 00:46:48,223
"மெ" என்று உனக்கே சொல்.

637
00:46:48,973 --> 00:46:50,934
அந்தப் பெண்ணால் புறக்கணிக்காதே.

638
00:46:51,059 --> 00:46:51,893
என்ன?

639
00:46:52,101 --> 00:46:53,686
மன தைரியத்துக்காக நீ அங்கு வரணும்.

640
00:46:54,771 --> 00:46:55,980
இல்லை, அவள் காரணம் இல்லை.

641
00:46:56,105 --> 00:46:57,357
எனக்கு உடம்பு சரியில்லை.

642
00:46:57,482 --> 00:46:58,942
அடக் கடவுளே.

643
00:46:59,984 --> 00:47:01,361
எல்க்ஸிடம் போதை இருக்கு.

644
00:47:04,697 --> 00:47:05,782
எந்த மாதிரியான போதை?

645
00:47:16,709 --> 00:47:19,003
பொறுமை, நண்பா.
மெதுவாக உள் இழுத்து, வெளி விடு.

646
00:47:19,337 --> 00:47:20,880
அது மாரத்தான், ஓட்டபந்தயமல்ல.

647
00:47:23,091 --> 00:47:24,092
ஆம், தெரியும்.

648
00:47:25,343 --> 00:47:27,011
ஹேய், என்ன விஷயம்?

649
00:47:27,387 --> 00:47:29,347
அவள் ஏற்கனவே வேறு யாருடனோ பேசிகின்றாள்.

650
00:47:30,723 --> 00:47:32,642
நான் நம்பியிருக்கக்கூடாது
என தெரியும், நண்பா.

651
00:47:32,850 --> 00:47:34,394
அவள் என்னை ஏமாற்றுகிறாள்.

652
00:47:35,395 --> 00:47:36,229
போ.

653
00:47:37,105 --> 00:47:39,107
-போ. போ.
-நான் அதற்கு பழகிக்கணும், சகோ.

654
00:47:39,232 --> 00:47:40,108
ஏன்?

655
00:47:40,233 --> 00:47:42,151
ஹென்றி பேஜ்.

656
00:47:42,277 --> 00:47:44,571
என்னால் முடியாது. என்னால் முடியாது.

657
00:47:44,946 --> 00:47:45,989
கிளம்புகிறேன், ஹென்றி.

658
00:47:46,614 --> 00:47:48,533
...வேகமாக, கைகளால் முகத்தை
மூடிக்கொண்டு வந்து,

659
00:47:48,658 --> 00:47:49,576
வாந்தி எடுத்துவிட்டான்.

660
00:47:49,701 --> 00:47:50,994
எங்கும் வாந்தி எடுத்துவிட்டான்.

661
00:47:51,160 --> 00:47:52,453
அனைவரும் செய்வதரியாது இருந்தனர்.

662
00:47:52,662 --> 00:47:54,539
சுவருக்கும் குளிர்சாதன பெட்டிக்கும் இடையே

663
00:47:54,664 --> 00:47:55,957
இருந்த மிகச்சிறிய பிளவு--

664
00:47:56,124 --> 00:47:57,750
-தண்ணீர் கொண்டு வருகிறேன்.
-என்ன?

665
00:47:57,875 --> 00:47:59,502
நான் போய் தண்ணீர் கொண்டு வருகிறேன்.

666
00:47:59,627 --> 00:48:01,504
-நீ நலமா?
-ஆம், நலம் தான்.

667
00:48:47,592 --> 00:48:48,426
உனக்காக கொண்டு வந்தேன்.

668
00:48:48,551 --> 00:48:50,303
-நன்றி.
-சரி.

669
00:48:55,016 --> 00:48:55,850
என்ன?

670
00:48:57,769 --> 00:48:58,936
நீயே பார்க்க...

671
00:49:00,897 --> 00:49:01,939
வேசி போலவா?

672
00:49:02,649 --> 00:49:04,609
கவர்ச்சியாக இருப்பதாக சொல்லவிருந்தேன்.

673
00:49:08,321 --> 00:49:10,698
சரி, இது என்னுடைய சென்ற ஆண்டின் ஆடை.

674
00:49:13,451 --> 00:49:14,702
நீ நன்றாக இருக்கிறாயா?

675
00:49:17,080 --> 00:49:20,625
ஆம். இந்த நிமிடம்,
நான் நன்றாக இருக்கிறேன்.

676
00:49:23,294 --> 00:49:25,380
நான் சந்தித்ததிலேயே
மிகவும் குழப்பமான மனுஷி

677
00:49:25,505 --> 00:49:26,673
நீதான்.

678
00:49:28,049 --> 00:49:31,803
நீ சந்தித்ததிலேயே
மிகவும் குழம்பிய மனுஷி

679
00:49:31,928 --> 00:49:34,472
நான்தான் என்பது தான் உன்னை குழப்புகிறது.

680
00:49:36,557 --> 00:49:37,517
ஆம், வந்து...

681
00:49:40,186 --> 00:49:43,356
இப்போது கொஞ்சம் குடித்திருப்பதால்

682
00:49:43,481 --> 00:49:45,608
மேலும் குழப்பமாக இருப்பதாக நினைக்கிறேன்.

683
00:49:57,620 --> 00:49:59,163
ஹேய், உன்னை தான் தேடுகிறேன்.

684
00:49:59,872 --> 00:50:01,666
-அட, அப்படியா?
-ஆம்.

685
00:50:02,875 --> 00:50:04,961
கடந்த ஆண்டு, நான்...

686
00:50:05,336 --> 00:50:06,254
எனக்கு புரிந்துவிட்டது.

687
00:50:07,130 --> 00:50:08,423
அது வினோதமானது.

688
00:50:09,632 --> 00:50:11,300
நாம் வெறும் நண்பர்களாக இருக்கலாம்.

689
00:50:12,844 --> 00:50:13,845
நல்லது.

690
00:50:17,432 --> 00:50:19,600
சென்ற கோடையில் நான்
பல பெண்களுடன் பழகினேன்.

691
00:50:21,686 --> 00:50:22,687
சரி.

692
00:50:23,020 --> 00:50:26,232
ஆம், உண்மையில்
நாம் பழகிய பிறகு குழம்பினேன்...

693
00:50:27,942 --> 00:50:28,985
உனக்குத் தெரியும்.

694
00:50:29,444 --> 00:50:31,821
-எனக்குத் தெரியும்.
-எனக்குத் தெரியவில்லை,

695
00:50:31,946 --> 00:50:34,073
அதை கண்டுபிடிக்க முயன்றதாக நினைக்கிறேன்.

696
00:50:34,907 --> 00:50:35,742
ஆனால்...

697
00:50:36,659 --> 00:50:40,079
அவர்கள் யார் மீதும் எனக்கு எதுவும்
தோன்றவில்லை என புரிந்துகொண்டேன்.

698
00:50:40,580 --> 00:50:44,459
என்னை எப்படி அழைப்பதென்று என்று
எனக்குத் தெரியவில்லை, ஆனால்...

699
00:50:46,711 --> 00:50:48,713
நீ என் முன்னால் இருக்கும்போது
ஏதோ ஒரு உணர்வு வருகிறது.

700
00:50:50,548 --> 00:50:53,092
அது நாம்...

701
00:50:53,384 --> 00:50:55,928
அல்லது... நாம்
ஒன்றாக இருப்பது போல இருக்கு.

702
00:50:57,972 --> 00:50:59,390
அப்போது, அப்படியே இருக்கலாம்.

703
00:51:32,715 --> 00:51:33,925
அடக்கடவுளே.

704
00:51:34,300 --> 00:51:35,635
என்னால் நடனமாட முடியாது.

705
00:52:25,101 --> 00:52:26,978
பொறு, பொறு, பொறு. கொஞ்சம் இரு.

706
00:53:14,984 --> 00:53:17,403
நீ நிறைய எதிர்ப்பார்க்க மாட்டாய்
என நம்புகிறேன்.

707
00:53:18,738 --> 00:53:21,157
ஏனெனில் நான் ரொம்ப பழுதாகிவிட்டேன்.

708
00:53:23,367 --> 00:53:26,495
வந்து, நீ நிறைய எதிர்ப்பார்க்க மாட்டாய்
என நம்புகிறேன்,

709
00:53:26,621 --> 00:53:29,665
ஏனெனில் இதற்கு முன் நான் இதை செய்ததில்லை.

710
00:53:32,251 --> 00:53:33,544
உன்னிடம் ஆணுறை இருக்கா?

711
00:53:34,337 --> 00:53:35,504
-இருக்கு.
-சரி.

712
00:53:36,547 --> 00:53:37,757
-அதை கொண்டு வரவா?
-ஆம்.

713
00:53:37,882 --> 00:53:38,966
சரி, கொண்டு வருகிறேன்.

714
00:54:07,495 --> 00:54:08,621
தொடங்கு.

715
00:54:08,746 --> 00:54:10,206
-நான் இதை செய்கிறேன்.
-சரி.

716
00:54:10,957 --> 00:54:12,875
மன்னிச்சிடு. பதற்றமாக இருந்தால்
நான் சிரிப்பேன்.

717
00:54:13,876 --> 00:54:15,962
-நான் செய்ய வேண்டுமா?
-ஆம். கண்டிப்பாக.

718
00:54:35,398 --> 00:54:36,440
ஹென்றி.

719
00:54:36,899 --> 00:54:37,900
என்ன?

720
00:54:39,068 --> 00:54:40,736
இதில் நன்றாக இருக்க முயற்சிக்காதே, சரியா?

721
00:54:40,945 --> 00:54:42,863
என்னுடன் சேர்ந்திரு.

722
00:54:44,365 --> 00:54:45,366
சரி.

723
00:55:33,581 --> 00:55:34,623
உங்கள் தகவலை சொல்லுங்கள்.

724
00:55:35,791 --> 00:55:36,667
ஹேய், கிரேஸ்.

725
00:55:36,792 --> 00:55:39,837
ஒரு ஹாய் சொல்ல வேண்டும், அப்புறம்...

726
00:55:41,547 --> 00:55:43,591
எனக்கு அனுபவம் இல்லாத போதிலும்...

727
00:55:44,133 --> 00:55:46,385
நேற்றிரவு என்னைப் போலவே,

728
00:55:46,510 --> 00:55:49,430
உனக்கும் கொஞ்சம் திருப்தியாக
இருந்திருக்கும் என நம்புகிறேன்.

729
00:55:50,056 --> 00:55:50,973
மேலும்...

730
00:55:52,892 --> 00:55:55,519
சத்தியமாக, நாம் மீண்டும் செய்ய
வாய்ப்பு கிடைத்தால்...

731
00:55:56,395 --> 00:55:57,897
அதாவது, காரணம் என்னவென்றால்...

732
00:55:58,022 --> 00:56:00,024
நாம் செய்வோம் என நினைக்கும் அளவுக்கு,

733
00:56:00,149 --> 00:56:02,526
நான் பெருமிதம் கொள்ளவில்லை,
ஆனால், நாம் செய்தால்,

734
00:56:02,651 --> 00:56:04,111
நிச்சயம் இன்னும் சிறப்பாக இருக்கும்.

735
00:56:05,154 --> 00:56:06,697
இல்லை, நான் நன்றாக இருப்பேன்.

736
00:56:07,948 --> 00:56:09,867
ஏனெனில்,

737
00:56:10,659 --> 00:56:12,953
சித்திரமும் கைப்பழக்கம்.

738
00:56:13,079 --> 00:56:15,414
ஆக, ஆமாம்.

739
00:56:15,539 --> 00:56:16,707
நல்லது, பிறகு பார்க்கலாம்.

740
00:56:18,042 --> 00:56:19,668
அட, அது மோசமாக இருந்தது.

741
00:56:42,316 --> 00:56:45,111
சென்றமுறை ஒருவர் எனக்கு
குரல் செய்தி அனுப்பியது நினைவில் இல்லை...

742
00:56:45,236 --> 00:56:48,280
அது மிகவும் மோசமாக இருந்தது.

743
00:56:52,409 --> 00:56:55,788
கிண்டலுக்காக . அது அற்புதமாக இருந்தது.

744
00:56:56,122 --> 00:56:59,375
நாளை மதியம் உன் வீட்டிற்கு வெளியே
என்னை சந்திக்க வருவாயா?

745
00:57:14,849 --> 00:57:15,808
என்ன?

746
00:57:16,892 --> 00:57:18,978
-எதிர்பாராத ஆச்சரியம்.
-இது எப்படி நடந்தது.

747
00:57:20,604 --> 00:57:21,981
கால அவகாசம் தான்.

748
00:57:23,607 --> 00:57:25,234
ஐயோ. சரி.

749
00:57:26,485 --> 00:57:27,653
நாம் எங்கே போகிறோம்?

750
00:57:28,779 --> 00:57:29,738
நீயே பார்ப்பாய்.

751
00:58:34,470 --> 00:58:37,223
அவன் இறப்பதற்கு முன் எப்போதும்
நாங்கள் இங்கு வருவோம்.

752
00:58:40,017 --> 00:58:41,810
இந்த பயணம் எனக்கு பிடித்திருக்கிறது.

753
00:58:41,936 --> 00:58:44,063
நான் அதை மீண்டும் நேசிக்க விரும்புகிறேன்.

754
00:58:49,985 --> 00:58:52,363
நீ எனக்காக இங்கு வரவேண்டும்.

755
00:58:54,156 --> 00:58:55,908
எனக்கு உன்னுடைய ஆதரவு வேண்டும்.

756
00:59:07,544 --> 00:59:08,545
இதைப் பிடி.

757
00:59:20,140 --> 00:59:21,517
தொழிற்சாலையிலிருந்து வந்ததா?

758
00:59:22,393 --> 00:59:23,644
இதன் அர்த்தம் என்ன?

759
00:59:24,561 --> 00:59:26,772
"என்னை காப்பாற்றினால்,
உன்னை காப்பாற்றுவேன்."

760
00:59:29,525 --> 00:59:30,901
நாங்கள் அப்படித்தான்.

761
00:59:47,918 --> 00:59:49,420
எனக்கு இதை செல்ல வேண்டும்.

762
01:00:09,315 --> 01:00:10,941
நான் ஒன்று சொல்கிறேன், ஷர்மா...

763
01:00:11,942 --> 01:00:14,028
அவனுடைய கண்ணாடியை கழிவறையில் தவறவிட்டான்.

764
01:00:14,153 --> 01:00:16,030
கிட்டத்தட்ட தண்ணீரையும் ஊற்றிவிட்டான்.

765
01:00:16,447 --> 01:00:19,033
அதே கண்ணாடியை போட்டுக் கொண்டு,
அதை எடுத்துவிட்டான்.

766
01:00:21,577 --> 01:00:22,578
நண்பர்களே, நான்...

767
01:00:24,455 --> 01:00:25,998
நான் உங்களுடன் சேர்ந்துகொள்ளலாமா?

768
01:00:33,380 --> 01:00:34,673
-சரி.
-சரி, புரிகிறதா?

769
01:00:34,798 --> 01:00:36,383
-ஆம், அது ரொம்ப உதவியது.
-நல்லது.

770
01:00:36,508 --> 01:00:37,968
-நன்றி.
-பரவாயில்லை.

771
01:00:38,177 --> 01:00:40,179
இதோ, எல்லா செய்திகளுடனும்
அச்சிட தயாராக உள்ளது!

772
01:00:40,304 --> 01:00:41,805
உங்களுடைய முதல் பதிப்பு!

773
01:00:41,930 --> 01:00:43,223
வாழ்த்துக்கள்!

774
01:00:43,349 --> 01:00:45,934
வீழ்ச்சிக்குத் திரும்புதல்

775
01:01:08,999 --> 01:01:09,833
இங்கேயே இரு.

776
01:01:12,878 --> 01:01:15,255
-அது யாருடைய கார்?
-இங்கேயே இரு, ஹென்றி.

777
01:01:21,053 --> 01:01:22,638
உனக்கு அது நினைவில்லையா?

778
01:01:22,763 --> 01:01:23,972
இல்லை, எனக்கு நினைவில்லை!

779
01:01:24,264 --> 01:01:26,850
எனக்கு வேண்டாம்...
இல்லை, முடியாது. போய் விடுங்கள்!

780
01:01:55,087 --> 01:01:55,963
ஹேய்.

781
01:01:58,507 --> 01:01:59,716
அவர்கள்தான் உன் அம்மாவா?

782
01:02:01,260 --> 01:02:02,094
இல்லை.

783
01:02:03,345 --> 01:02:05,889
ஆமாம். அது... முக்கியமில்லை.

784
01:02:06,473 --> 01:02:07,516
நீ நலம் தானே?

785
01:02:08,517 --> 01:02:09,852
ஆமாம். நாம் போகலாமா?

786
01:02:26,118 --> 01:02:27,578
நீ உன் அப்பாவுடன் வாழ்கிறாயா?

787
01:02:30,497 --> 01:02:33,375
உன் குடும்பத்தை பற்றி எனக்கு
எதுவும் தெரியாது, அதனால்தான்.

788
01:02:33,500 --> 01:02:35,878
சரி. வந்து, உனக்கு தெரிந்த அளவு போதும்.

789
01:02:38,547 --> 01:02:39,923
ஆனால் இப்போது ஒரு விஷயம் நடந்தது,

790
01:02:40,048 --> 01:02:41,383
எதுவும் தெரியாமல் என்னால்

791
01:02:41,508 --> 01:02:42,968
-உதவ முடியாது.
-எனக்கு உதவாதே!

792
01:02:43,135 --> 01:02:45,095
நான் உதவி கேட்கவில்லை.
எனவே உதவ முயற்சிக்காதே.

793
01:02:45,262 --> 01:02:46,555
என்னை சரிசெய்ய முயலாதே, சரியா?

794
01:03:03,447 --> 01:03:04,531
அட, இதைப் பார்.

795
01:03:04,656 --> 01:03:06,867
அது ஊர்சுற்றுவதற்கான மாநாடு.

796
01:03:07,242 --> 01:03:08,327
போகலாம், மக்களே.

797
01:03:08,452 --> 01:03:09,828
நாம் மூன்று பதிப்புகளை திட்டமிடணும்.

798
01:03:09,953 --> 01:03:11,914
கொஞ்சம் கவனம் செலுத்தினால் நல்லது.

799
01:03:12,206 --> 01:03:14,500
ஹென்றி, உன் கூட்டாளி எங்கே?

800
01:03:15,834 --> 01:03:16,752
எனக்குத் தெரியாது.

801
01:03:17,669 --> 01:03:18,712
அவளுக்கு உடம்பு சரியில்லையா?

802
01:03:20,547 --> 01:03:21,465
எனக்குத் தெரியாது.

803
01:03:23,008 --> 01:03:25,135
இன்று தான் அவளுக்கு விபத்து நடந்தது.

804
01:03:25,385 --> 01:03:26,261
அட, பாவம்.

805
01:03:27,429 --> 01:03:28,472
எனக்கு அது தெரியாது.

806
01:03:29,473 --> 01:03:30,516
ஆம்.

807
01:03:30,641 --> 01:03:33,101
அவளது காதலனுக்காக ஈஸ்ட் ரிவர்
மெழுகுவர்த்தி ஏற்றி விழித்திருந்தது.

808
01:03:36,396 --> 01:03:38,524
அவளுக்கு வண்டி ஓட்ட தெரியுமா?
அவளிடம் உரிமம் இருக்கா?

809
01:03:38,649 --> 01:03:39,650
நாம் இருக்கணுமா...

810
01:03:40,609 --> 01:03:42,694
அநேகமாக நீ அதைப் பற்றி எழுதலாம்.

811
01:03:43,946 --> 01:03:45,155
உங்கள் தகவலை சொல்லுங்கள்

812
01:03:46,156 --> 01:03:47,658
-அப்படிதான் நினைப்பேன்.
-அப்படியா?

813
01:03:47,783 --> 01:03:48,659
ஆம்.

814
01:03:48,784 --> 01:03:49,910
-தெரியலை.
-சும்மா சுற்றலாம்.

815
01:03:50,035 --> 01:03:51,537
இன்னும் கொஞ்சம் சுற்றலாம்.

816
01:03:51,662 --> 01:03:53,038
என்ன? நிறுத்து.

817
01:03:53,872 --> 01:03:55,832
-நிறுத்து.
-வெட்டியாகச் சுற்றலாம்.

818
01:03:58,627 --> 01:04:00,379
-ஹேங்கார்ட்.
-எங்கே போகிறாய்?

819
01:04:26,321 --> 01:04:27,197
ஹென்றி?

820
01:04:28,532 --> 01:04:29,449
அது நீயா?

821
01:04:29,700 --> 01:04:30,534
ஆமாம்.

822
01:04:31,702 --> 01:04:32,786
உள்ளே வா.

823
01:04:36,707 --> 01:04:38,834
நான் குழாய் முன்னால்
நான் தூங்கியிருப்பேன்.

824
01:04:41,169 --> 01:04:43,046
சரி, என் பெயர் மார்ட்டின்.

825
01:04:47,217 --> 01:04:48,677
இவள் என்னுடைய மனைவி சாரா.

826
01:04:49,636 --> 01:04:50,762
-ஹாய்.
-ஹலோ.

827
01:04:55,183 --> 01:04:57,269
கிரேஸ் உன்னைப் பற்றி
நிறைய பேசியிருக்கிறாள்.

828
01:04:58,186 --> 01:04:59,855
நீ நல்ல நண்பன் என்று சொன்னாள்.

829
01:05:00,230 --> 01:05:03,066
சரி, அவள் நன்றாக இருக்கிறாள் என
உறுதிபடுத்த விரும்பினேன்,

830
01:05:03,191 --> 01:05:04,860
ஏனெனில் இன்று நான் அவளுடன் பேசவில்லை.

831
01:05:05,986 --> 01:05:08,614
மேலும், இது என்ன நாள் என்பதால், நான்...

832
01:05:11,366 --> 01:05:14,369
வந்து, அவள் வீட்டிற்கு
கொஞ்ச நேரத்தில் வந்துவிடுவாள்.

833
01:05:15,579 --> 01:05:17,497
வேண்டுமென்றால் நீ மேலே சென்று காத்திரு.

834
01:05:21,168 --> 01:05:23,003
நன்றி. உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி.

835
01:05:23,128 --> 01:05:25,088
-சரி, உன்னையும் தான், ஹென்றி.
-சரி.

836
01:06:29,444 --> 01:06:30,737
இப்போது உனக்கு தெரிந்திருக்கும்.

837
01:06:35,784 --> 01:06:38,245
-நீ இங்குதான் வாழ்கிறாயா?
-ஆம்.

838
01:06:40,914 --> 01:06:42,833
விபத்துக்கு ஒரு மாதத்திற்கு முன்பு

839
01:06:42,958 --> 01:06:44,376
அம்மாவிடமிருந்து விலகிச் சென்றேன்.

840
01:06:44,710 --> 01:06:48,588
அவர்களுக்கு குடிப்பழக்கம் அதிகமாகி,
மோசமான நிலையில் இருந்தார்கள்.

841
01:06:49,423 --> 01:06:50,799
ஆனால் நீ இன்னும் இங்கு இருக்கிறாய்.

842
01:06:51,174 --> 01:06:55,220
நான் வேறு எங்கே போவது,
என் அம்மாவின் காதலனுடைய படுக்கைக்கா?

843
01:07:02,519 --> 01:07:03,812
நீ இதற்காக திரும்பி போனாயா?

844
01:07:16,616 --> 01:07:18,201
அதாவது, நீ அவரது துணிகளை கூட துவைக்கிறாயா?

845
01:07:18,869 --> 01:07:20,495
ஏனெனில் நீ அவரது உடைகளை அணிகிறாய், சரியா?

846
01:07:22,038 --> 01:07:23,999
என்னால் முடிந்தவற்றை செய்கிறேன்.

847
01:07:24,207 --> 01:07:26,918
முடிந்ததை செய்து,
அவருடைய மோசமான அறையில் வாழ்கிறாயா?

848
01:07:28,420 --> 01:07:29,963
நாங்கள் ஒன்றாக வளர்ந்தோம்.

849
01:07:31,631 --> 01:07:33,675
அவன் என்னுடைய குடும்பம்.

850
01:07:36,428 --> 01:07:38,346
நீ அவனை மறக்க வேண்டும் என சொல்லவில்லை.

851
01:07:39,556 --> 01:07:42,434
என்னால் முடிந்த எல்லாவற்றையும்
உனக்கு தருகிறேன்.

852
01:07:42,726 --> 01:07:45,854
மற்றும் இந்த... குழப்பமும்
இந்த பைத்தியக்காரத்தனமும்

853
01:07:45,979 --> 01:07:47,481
இது போல் தெரிகிறது.

854
01:07:47,606 --> 01:07:50,776
உன்னால் சமாளிக்க முடியாது,
ஆனால் நான் அதை எதிர்பார்க்கவும் இல்லை.

855
01:07:52,194 --> 01:07:54,654
உனக்கு வேறு என்ன தான் கொடுக்க முடியும்?

856
01:07:56,072 --> 01:07:58,283
எனக்கு வேறு என்ன கொடுப்பாய்?
விளையாடுகிறாயா...

857
01:07:59,826 --> 01:08:01,411
அட, இது முட்டாள்தனமானது.

858
01:08:01,787 --> 01:08:03,163
-நிறுத்து.
-இல்லை, நீ நிறுத்து!

859
01:08:03,288 --> 01:08:04,873
என்னை வழி நடத்துவதை நிறுத்து! அதாவது...

860
01:08:04,998 --> 01:08:07,334
நான் உன்னுடன் பொழுது போக்க சுற்றவில்லை.

861
01:08:09,294 --> 01:08:10,796
என்னை தனியாக விட சொன்னேனே.

862
01:08:11,046 --> 01:08:12,589
ஆம், பிறகு அப்படி செய்ய வேண்டாம் என்றாயே.

863
01:08:14,716 --> 01:08:16,760
ஏனெனில், எனக்குத் தெரியாது.

864
01:08:16,885 --> 01:08:17,969
-தெரியும்.
-எனக்கு தெரியாது.

865
01:08:18,094 --> 01:08:19,179
குழப்பமாக இருக்கு, ஹென்றி.

866
01:08:19,304 --> 01:08:20,555
-எனக்கு தெரியலை.
-எனக்கு தெரியும்!

867
01:08:21,765 --> 01:08:24,226
உன்னை காதலிப்பது
ஆரம்பத்திலேயே எனக்குத் தெரியும்.

868
01:08:26,728 --> 01:08:29,481
உன் விருப்பம் போல நான் மாறியதாக
பாசாங்கு செய்ய முடியாது.

869
01:08:29,606 --> 01:08:31,483
-மாற விரும்புவதாக சொன்னாய்.
-சொன்னேன்.

870
01:08:34,402 --> 01:08:36,279
நான் இன்னும் தயாராகவில்லை. நான்...

871
01:08:36,404 --> 01:08:38,782
-சொன்னேன், ஆனால் இன்னும் தயாராகவில்லை.
-சரி, எனக்கு...

872
01:08:40,992 --> 01:08:42,702
எனக்கு கவலை இல்லை. சரியா?

873
01:08:44,621 --> 01:08:45,997
-இருக்கு.
-எனக்கு-- கவலை இல்லை.

874
01:08:46,122 --> 01:08:47,207
எனக்கு கவலை இல்லை.

875
01:08:47,749 --> 01:08:50,335
உண்மையில், நீ நீயாக தான் எனக்கு வேண்டும்.

876
01:08:52,879 --> 01:08:54,881
ஆனால் என்னை நெருங்கவிட்டு,
என்னுடன் பேசு.

877
01:08:57,342 --> 01:08:58,552
நான் உன்னை நேசிக்கிறேன்.

878
01:09:25,453 --> 01:09:26,913
ஏன் என்னை அப்படி முத்தமிட்டாய்?

879
01:09:30,041 --> 01:09:31,126
எப்படி?

880
01:09:35,046 --> 01:09:36,339
நீ என்னை நேசிப்பதைப் போல.

881
01:09:40,844 --> 01:09:42,971
எனக்குத் தெரிந்த ஒரே வழி இதுதான்.

882
01:10:34,856 --> 01:10:36,232
உனக்காக அடுப்பில் இருக்கு, டோட்ஸ்.

883
01:10:36,358 --> 01:10:38,109
-ஹென்றி?
-என்ன?

884
01:10:40,320 --> 01:10:42,489
-என்னவாயிற்று?
-ஒன்றுமில்லை.

885
01:10:43,865 --> 01:10:45,617
-என்னவாயிற்று?
-ஒன்றுமில்லை.

886
01:10:45,742 --> 01:10:46,952
சொல்.

887
01:10:47,786 --> 01:10:50,330
என்ன நடக்கிறது என்று.
எங்களுக்கு தெரிய வேண்டும்.

888
01:10:50,914 --> 01:10:51,957
கிரேஸ் பற்றிய விஷயமா?

889
01:10:52,707 --> 01:10:54,709
வழக்கமாக எல்லோரும் அனுபவிக்கும் ஆனால்

890
01:10:54,834 --> 01:10:56,127
உங்களுக்குப் புரியாத விஷயம்.

891
01:10:56,252 --> 01:10:58,380
அட, சொல். நாங்கள் வழக்கமானவர்கள் இல்லையா?

892
01:11:00,924 --> 01:11:01,758
இல்லை.

893
01:11:02,384 --> 01:11:03,510
இல்லை. கேலி செய்கிறீர்களா?

894
01:11:03,635 --> 01:11:05,971
என் வயதிலிருந்தே
உங்க உறவு நன்றாக இருக்கிறது.

895
01:11:09,265 --> 01:11:10,767
-புரிந்துவிட்டது.
-இல்லை.

896
01:11:10,892 --> 01:11:12,394
-நாம் போக வேண்டும்.
-அம்மா.

897
01:11:12,519 --> 01:11:14,229
அவன் சரியாக சொன்னான். உங்களுக்கு புரியாது.

898
01:11:14,938 --> 01:11:15,897
நான் பார்த்துக்கொள்கிறேன்.

899
01:11:30,620 --> 01:11:32,414
-நீங்கள் பிரிந்துவிட்டீர்களா?
-ஆமாம்.

900
01:11:34,124 --> 01:11:36,584
நாங்கள் ஒன்றாக இருந்தோமா
என்றுகூட எனக்கு தெரியலை.

901
01:11:37,043 --> 01:11:38,878
சரி, அது தடைக்கல்
போன்றதாக இருக்கலாம்.

902
01:11:39,004 --> 01:11:40,547
இல்லை,
அவளுக்கு நான் வேண்டாமாம்.

903
01:11:40,964 --> 01:11:42,132
என்ன நடந்தது?

904
01:11:44,217 --> 01:11:45,969
அவள் வேறு யாரையோ காதலிக்கிறாள்.

905
01:11:47,303 --> 01:11:48,680
ஐயோ.

906
01:11:55,979 --> 01:11:56,938
சரி.

907
01:12:01,818 --> 01:12:04,404
-நல்ல செய்தி, கெட்ட செய்தி, எது வேண்டு?
-எதுவும் வேண்டாம்.

908
01:12:04,529 --> 01:12:06,865
சரி, அது உன்னை காயப்படுத்தும்
என்பது கெட்ட செய்தி.

909
01:12:07,824 --> 01:12:10,452
உன் மூளை, டோபமைன் மற்றும்
ஆக்ஸிடாஸினின் நிலையான

910
01:12:10,577 --> 01:12:13,079
-ஓட்டத்திற்குப் பழகிவிட்டது.
-இதோ மீண்டும்.

911
01:12:13,204 --> 01:12:15,457
ஆம், தெரியும். மன்னிச்சிடு,
ஆனால் அதுதான்

912
01:12:15,582 --> 01:12:17,834
அன்பின் ஆனந்தமான உணர்வுகளுக்கு காரணம்.

913
01:12:18,418 --> 01:12:21,713
ஆனால் இப்போது அது மனஅழுத்த
ஹார்மோன்களால் மாற்றப்பட்டுவிட்டது.

914
01:12:21,963 --> 01:12:23,965
அவை உன்னை குப்பையாக உணர வைக்கப் போகிறது.

915
01:12:24,090 --> 01:12:27,260
தலைவலி, இறுகிய தசைகள், இறுகிய மார்பு.

916
01:12:28,178 --> 01:12:30,805
உன் உடம்பு நன்றாக-உணர வைக்கும்
இராசயனத்திற்காக ஏங்குகிறது.

917
01:12:32,640 --> 01:12:34,017
அடிப்படையில் இது திரும்பப் பெறுகிறது.

918
01:12:34,768 --> 01:12:35,810
அற்புதம்.

919
01:12:36,144 --> 01:12:38,146
ஆம்.

920
01:12:43,234 --> 01:12:47,405
நேற்றுதான் நான் அவனைப் பற்றி
நினைக்காத முதல் நாள்.

921
01:12:50,658 --> 01:12:54,079
நாளை தான் என் முதல் டேட்டிங்.

922
01:13:01,461 --> 01:13:02,295
ஹென்றி.

923
01:13:05,465 --> 01:13:09,427
காதல், எப்போது வேண்டுமானாலும்
வந்து செல்லும் ஒரு ரசாயன மாற்றம்.

924
01:13:10,887 --> 01:13:13,890
இதோ நல்ல செய்தி. நெஞ்சம் உடைந்துவிடும்.

925
01:13:15,266 --> 01:13:16,643
உன் மூளை அதை சரி செய்யும்.

926
01:13:17,352 --> 01:13:20,522
உன் உடலில் ரசாயன மாற்றங்கள்
பழையபடி மாறும்.

927
01:13:23,316 --> 01:13:24,776
இது எல்லாம் நேர விரயம்.

928
01:13:25,068 --> 01:13:26,820
அடக்கடவுளே.

929
01:13:27,237 --> 01:13:28,238
ஆம்.

930
01:13:29,114 --> 01:13:30,073
ஹேய்.

931
01:13:32,742 --> 01:13:34,661
முடிந்தால் அனைத்தையும்
திரும்ப எடுத்துக்கொள்வாயா?

932
01:13:38,915 --> 01:13:40,125
உன்னால் முடியாது.

933
01:13:42,669 --> 01:13:44,087
அவள் இப்போது உன்னில் ஒரு அங்கம்.

934
01:14:43,813 --> 01:14:44,814
நீ முயற்சிப்பது...

935
01:14:44,939 --> 01:14:46,774
நான் சொல்வதையே
திரும்ப சொல்லப் போகிறாயா? சரி.

936
01:14:47,066 --> 01:14:50,320
இல்லை, ஆனால் எனக்கு ஒரு
உண்மையான கேள்வி இருக்கு. பொறு.

937
01:14:50,570 --> 01:14:52,071
-நீ கூடாது...
-அங்கு என்ன இருக்கு?

938
01:14:52,197 --> 01:14:54,073
நான் செய்துவிட்டேன்.

939
01:14:55,742 --> 01:14:56,826
நீ எங்கே போகிறாய்?

940
01:14:59,078 --> 01:15:01,331
தெரியவில்லை. ஆனால்
இதை பார்க்க விருப்பமில்லை.

941
01:15:04,792 --> 01:15:07,045
வேறு யாருக்காகவும்
நீ மகிழ்ச்சி அடைய மாட்டாய்.

942
01:15:07,170 --> 01:15:09,756
வேண்டாம்... அப்படி செய்யாதே.

943
01:15:10,298 --> 01:15:12,133
போட்டி

944
01:15:13,218 --> 01:15:14,510
மாநகர சோதனை தேர்வு நேரம்

945
01:15:24,229 --> 01:15:26,272
நான் டாமின் அப்பா
இன்று முழுவதும் கிரேஸை காணவில்லை.

946
01:15:28,650 --> 01:15:31,069
அவள் வழக்கமாக செல்லும்
இடங்களில் தேடிவிட்டோம்.

947
01:15:34,030 --> 01:15:36,241
ஏதாவது தெரியுமா?

948
01:15:43,957 --> 01:15:44,999
கவனி!

949
01:15:46,751 --> 01:15:48,002
அதை கவனித்தாயா?

950
01:16:07,897 --> 01:16:08,898
கிரேஸ்?

951
01:16:14,946 --> 01:16:16,281
-நீ நலம் தானே?
-எனக்கு...

952
01:16:16,406 --> 01:16:18,283
-உன்னிடம் சொல்ல வேண்டும்.
-என்ன? என்ன வேண்டும்?

953
01:16:18,408 --> 01:16:19,450
உன்னிடம் சொல்ல வேண்டும்.

954
01:16:19,617 --> 01:16:21,494
-என்ன?
-எனக்கு சொல்ல வேண்டும், டாம்.

955
01:16:22,161 --> 01:16:23,329
எனக்கு சொல்ல வேண்டும், டாம்.

956
01:16:23,579 --> 01:16:25,832
-சரி, சொல்.
-அது நானாக இருந்திருக்க வேண்டும்.

957
01:16:26,040 --> 01:16:29,669
அது நானாக இருந்திருக்க வேண்டும்.

958
01:16:29,794 --> 01:16:31,629
-இல்லை. இல்லை.
-அது நானாக இருந்திருக்க வேண்டும்.

959
01:16:31,754 --> 01:16:33,631
ஆமாம், மோசமானவனே!

960
01:16:33,756 --> 01:16:34,966
அது என்னுடைய தவறு!

961
01:16:35,300 --> 01:16:36,968
-இல்லை, அப்படியில்லை, கிரேஸ்.
-அப்படிதான்.

962
01:16:37,093 --> 01:16:39,679
-அப்படியில்லை.
-உன்னை கேலி செய்வதை நிறுத்த சொன்னாய்.

963
01:16:39,804 --> 01:16:40,722
நீ சொன்னாய்.

964
01:16:40,847 --> 01:16:42,765
நீ சொன்னதை நான் கேட்கவில்லை.

965
01:16:43,474 --> 01:16:45,393
-நான் கேட்கவில்லை.
-பரவாயில்லை.

966
01:16:45,518 --> 01:16:47,145
உன்னை சிரிக்க வைக்க விரும்பினேன்.

967
01:16:47,270 --> 01:16:49,439
-பரவாயில்லை.
-ஆனால் என்னை நிறுத்த சொன்னாய்.

968
01:16:49,689 --> 01:16:51,357
-அட, என்னை மன்னித்துவிடு.
-சரி.

969
01:16:51,482 --> 01:16:53,985
என்னை மன்னித்துவிடு!

970
01:16:54,110 --> 01:16:55,945
பரவாயில்லை.

971
01:16:58,239 --> 01:16:59,365
பரவாயில்லை.

972
01:17:34,692 --> 01:17:37,779
நான் தான் அவனை திசைத் திருப்பினேன்.

973
01:17:40,323 --> 01:17:42,408
மேலும், அந்த ஒரு கணமே எனக்குத் தெரியும்,

974
01:17:42,533 --> 01:17:43,951
நாங்கள் நசுங்கப் போகிறோம் என்று.

975
01:17:48,956 --> 01:17:52,668
அது நடப்பதற்கு முன்னால் நான்
கடைசியாக நினைத்தது, "ஐயோ" என்று.

976
01:17:56,756 --> 01:17:58,800
வாழ்நாள் முழுதும் நான் கொண்டிருக்கக்கூடிய

977
01:17:58,925 --> 01:18:00,885
கடைசியில் எண்ணம் "அடச் சை" என்றிருக்கிறது.

978
01:18:07,558 --> 01:18:08,851
நான் டாமைப் பற்றி நினைக்கவில்லை.

979
01:18:08,976 --> 01:18:11,062
நான் அவனைப் பற்றி நினைக்ககூட இல்லை.

980
01:18:15,024 --> 01:18:17,568
இதனால் நான் கெட்டவளா, ஹென்றி?

981
01:18:19,779 --> 01:18:20,738
இல்லை.

982
01:18:22,657 --> 01:18:24,117
உன்னை மனுஷியாக்குகிறது.

983
01:18:26,953 --> 01:18:29,205
அவன் எதை பற்றி யோசித்திருப்பான்
என தெரியவில்லை.

984
01:18:30,456 --> 01:18:32,875
அவனுடைய கடைசி எண்ணம் என்னவாக
இருந்திருக்கும் என தெரியவில்லை.

985
01:18:37,088 --> 01:18:38,965
அவன் உன்னை பற்றி நினைத்திருப்பான், கிரேஸ்.

986
01:18:41,426 --> 01:18:42,427
நிச்சயமாக சொல்கிறேன்.

987
01:20:37,416 --> 01:20:39,794
அந்த ஆடையில் தான் நான் அவனை
திருமணம் செய்துகொள்ளவிருந்தேன்.

988
01:21:30,553 --> 01:21:32,722
இல்லை, வைத்துக்கொள்.
வெளியே குளிராக இருக்கு.

989
01:22:18,017 --> 01:22:19,101
அனைவருக்கும் ஒரு அறிவிப்பு.

990
01:22:19,602 --> 01:22:21,896
தயவுசெய்து, அனைவரும் கவனம் செலுத்துங்கள்.

991
01:22:22,605 --> 01:22:23,648
நன்றி.

992
01:22:24,065 --> 01:22:27,610
சில தனிப்பட்ட சிக்கல்களைச் சமாளிக்க
கிரேஸ் டவுன் பள்ளியிலிருந்து

993
01:22:27,735 --> 01:22:29,445
சிறிது காலம் விலகியிருக்க முடிவு செய்ததை

994
01:22:29,570 --> 01:22:31,322
உங்களுக்குத் தெரியப்படுத்த விரும்புகிறேன்.

995
01:22:31,447 --> 01:22:35,660
அப்புறம், அவள் திரும்பி வரும்போது,
நாளிதழைவிட தன்னுடைய படிப்பில்

996
01:22:35,785 --> 01:22:37,495
கவனம் செலுத்த விரும்புகிறாள்.

997
01:22:37,620 --> 01:22:39,288
நிச்சயம் அவளது பிரிவால் வாடுவோம்,

998
01:22:39,413 --> 01:22:40,873
ஆனால் இந்த நேரத்தில்

999
01:22:40,998 --> 01:22:43,292
இதுதான் அவளுக்கான சிறந்த
முடிவாக தெரிகிறது.

1000
01:22:43,417 --> 01:22:45,795
இந்த செய்தி அனைவருக்கும்
ஏமாற்றமாக இருக்கக்கூடும் என தெரியும்,

1001
01:22:45,920 --> 01:22:48,255
ஆனால் மூன்று பதிப்புகளை உருவாக்க

1002
01:22:48,381 --> 01:22:49,507
நீங்கள் உதவுவீர்கள் என

1003
01:22:49,632 --> 01:22:52,176
நான் மிகவும் நம்புவதை நீங்கள்
தெரிந்துகொள்ள வேண்டும்.

1004
01:23:02,311 --> 01:23:03,813
நீங்கள் பதின்ம வயதினராக இருக்கும்போது,

1005
01:23:04,105 --> 01:23:07,024
மூளையில் உள்ள ராசாயனங்கள்
உங்கள் குழந்தைப் பருவத்தின்

1006
01:23:07,149 --> 01:23:10,027
பாதுகாப்பிலிருந்து விலகச் செய்து
இளமைப் பருவத்தின் வேகத்திற்கு

1007
01:23:10,152 --> 01:23:13,030
இழுத்துச் செல்லும்
முடிவுகளை எடுக்க வைக்கும்.

1008
01:23:15,032 --> 01:23:16,992
ஒருமுறை என் நண்பர் ஒருவர்,
வயது முதிர்ந்தவர்கள்

1009
01:23:17,118 --> 01:23:18,828
இந்த பதின்பருவ குழப்பங்களிலிருந்து

1010
01:23:18,953 --> 01:23:21,330
அதிர்ஷ்டவசமாக தப்பித்த
மன பாதிப்புக்குள்ளான குழந்தைகள் என்றார்.

1011
01:23:22,623 --> 01:23:24,458
நீங்கள் அனைவரும் வெளியே சென்று

1012
01:23:24,583 --> 01:23:26,836
அந்த கோணத்தில்
உலகத்தை பார்க்குமாறு வலியுறுத்துகிறேன்.

1013
01:23:27,628 --> 01:23:31,048
உங்கள் பெற்றோரையும், உங்கள்
உடன்பிறந்த மூத்தவர்களையும் பாருங்கள்.

1014
01:23:31,465 --> 01:23:33,801
சாலையில் நீங்கள்
கடந்து செல்பவர்களைப் பாருங்கள்.

1015
01:23:34,343 --> 01:23:37,930
பார்க்கும்போது, அவர்களுடைய வாழ்க்கையின்
ஒரு கட்டத்தில், அவர்களும் இதை

1016
01:23:38,639 --> 01:23:40,307
கடந்திருப்பார்கள் என சிந்தியுங்கள்.

1017
01:23:41,517 --> 01:23:43,894
அவர்களும் தாங்க முடியாத தனிமை,

1018
01:23:44,019 --> 01:23:46,856
முற்றிலும் தாங்க முடியாத சக்தியற்ற தன்மை

1019
01:23:47,398 --> 01:23:49,984
மற்றும் இளமை காலத்தின்
இருளை உணர்ந்திருப்பார்கள்.

1020
01:23:51,193 --> 01:23:52,403
இரண்டாவது பதிப்பு!

1021
01:23:52,987 --> 01:23:54,447
குளிர்கால பதிப்பு - 2020

1022
01:23:54,822 --> 01:23:55,906
இது மூன்றாவது பதிப்பு.

1023
01:23:56,365 --> 01:23:58,117
இன்று அதிகம் பயன்படுத்தப்படும்
சமூக ஊடக செயலிகள்

1024
01:23:59,076 --> 01:24:03,080
வடுக்களை நாம் அசிங்கமாக அல்லது
குறையாக நினைக்கிறோம்...

1025
01:24:07,126 --> 01:24:09,795
நாம் மறைக்க அல்லது
மறக்க விரும்பும் விஷயங்களால்.

1026
01:24:16,051 --> 01:24:17,428
ஆனால் அவை ஒருபோதும் போகாது.

1027
01:24:24,101 --> 01:24:25,394
என் உயர்நிலைப் பள்ளியின்

1028
01:24:26,020 --> 01:24:27,480
கடைசி நாளில் வெளியான,

1029
01:24:28,147 --> 01:24:29,398
என்னுடைய கடைசி பதிப்பில்,

1030
01:24:30,357 --> 01:24:33,194
என் கடைசி தலையங்கத்தை
நான் எழுதும்போது தான்,

1031
01:24:33,861 --> 01:24:35,654
வடுக்கள் என்பது நாம் இழந்ததை

1032
01:24:36,655 --> 01:24:40,284
நினைவூட்டுவது அல்ல, மாறாக
என்ன உருவானது என்பதை நினைவூட்டுகின்றன

1033
01:24:41,076 --> 01:24:44,246
என்பதை கடைசியாக புரிந்துக் கொண்டேன்.

1034
01:24:45,790 --> 01:24:49,168
வாழ்த்துகள்
பட்டதாரிகளே

1035
01:25:15,402 --> 01:25:16,654
-ஹேய்.
-ஹேய்.

1036
01:25:18,113 --> 01:25:18,989
நாம்...

1037
01:25:22,076 --> 01:25:23,410
வாழ்த்துக்கள்.

1038
01:25:24,787 --> 01:25:25,913
ஆம், உனக்கும்.

1039
01:25:26,163 --> 01:25:27,540
-நன்றி.
-சரி.

1040
01:25:30,209 --> 01:25:31,710
அடுத்த வருடம் எங்கு செல்கிறாய்?

1041
01:25:32,336 --> 01:25:33,879
பென்னிங்டனுக்குப் போகிறேன்.

1042
01:25:35,089 --> 01:25:36,340
அது வெர்மான்ட்டில் உள்ள ஒரு பள்ளி.

1043
01:25:36,465 --> 01:25:37,925
-அது எழுதுவதற்கு ஏற்றது, அதனால்.
-நன்று.

1044
01:25:38,092 --> 01:25:39,009
நீ என்ன செய்கிறாய்?

1045
01:25:40,678 --> 01:25:42,179
ஓராண்டு விடுப்பு எடுக்கிறேன்.

1046
01:25:44,223 --> 01:25:46,100
சிகிச்சையை தொடரப் போகிறேன்.

1047
01:25:51,230 --> 01:25:53,816
ஆமாம், நான் ஒருபோதும்
தயாராக இருக்கவில்லை...

1048
01:25:55,109 --> 01:25:56,569
உனக்கு தெரியுமா?

1049
01:25:57,820 --> 01:25:58,988
நிச்சயம் தெரிந்திருக்கும்.

1050
01:25:59,446 --> 01:26:00,406
ஆமாம்.

1051
01:26:01,824 --> 01:26:04,034
மீண்டும் என் வார்த்தைகளை
கண்டுபிடிக்க வேண்டும்.

1052
01:26:08,497 --> 01:26:09,665
நீ கண்டுபிடிப்பாய்.

1053
01:26:15,337 --> 01:26:16,672
ஒன்று சொல்ல வேண்டும்...

1054
01:26:30,769 --> 01:26:35,065
நீ அணுக்களின் அசாதாரண தொகுப்பு,
ஹென்றி பேஜ்.

1055
01:28:00,025 --> 01:28:01,151
ஹேய், அது ஹேங்கார்டா?

1056
01:28:01,276 --> 01:28:02,319
-ஹேங்கார்ட்!
-ஹேங்கார்ட்!

1057
01:28:02,444 --> 01:28:03,445
வா போகலாம்.

1058
01:28:04,196 --> 01:28:05,489
நடந்து போகலாம் என நினைக்கிறேன்.

1059
01:28:05,698 --> 01:28:06,824
அவன் நடக்கப் போகிறானா?

1060
01:28:09,201 --> 01:28:10,577
நானும் நடக்கப் போகிறேன்.

1061
01:28:25,676 --> 01:28:27,678
-ரொம்ப தூரம் நடக்கணும்.
-துணைக்கு யாராவது வேண்டுமா?

1062
01:28:28,804 --> 01:28:29,888
ஆம், வேண்டும்.

1063
01:30:03,899 --> 01:30:07,820
இரசாயன இதயம்

1064
01:32:57,698 --> 01:32:59,658
தமிழாக்கம் அனு, மேனகா.

